வறுமையால் விருதுகளை விற்ற காமெடி நடிகை... கைகொடுத்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி

ஐதராபாத் : தெலுங்கில் சிறப்பான காமெடி நடிகையாக வலம்வந்தவர் பவள சியாமளா.

அவர் தான் மிகுந்த வறுமையில் வாடி வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்காக தான் பெற்ற விருதுகளை விற்று விட்டதாகவும் கூறியிருந்தார்.

பவள சியாமளா அவதி

பவள சியாமளா அவதி

தெலுங்கில் பழம்பெரும் நடிகையான பவள சியாமளா, சுவரணகமலம், பாபாய் ஓட்டல், கோதண்ட ராமுடு, இந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2019ல் மதுவடலரா படம் வெளியானது. தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார்.

சிரமமான வாழ்க்கை

சிரமமான வாழ்க்கை

இவரது கணவர் இறந்த நிலையில், மகளும் நோய்வாய்ப்பட்டுள்ளார். இதையடுத்து வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக உள்ளதாக இவர் தெரிவித்திருந்தார். தன்னுடைய வயிற்றுப் பாட்டிற்காக தன்னுடைய விருதுகளை விற்று விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார்.

பென்ஷன் கிடைக்க ஏற்பாடு

பென்ஷன் கிடைக்க ஏற்பாடு

இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்வியுற்ற தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதற்கான செக்கை அவரது உதவியாளர் சியாமளாவிடம் கொடுத்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

சிரஞ்சீவியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வறுமையால் தவித்துவந்த சியாமளா விருதுகளை விற்று தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிய சம்பவம் வெளியாகி பல்வேறு தரப்பினரின் வேதனைக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சிரஞ்சீவியின் இந்த உதவி அவரது வாழ்க்கையை ஓரளவிற்கு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X