கமல்ஹாசனை விட சிரஞ்சீவி தான் சிறந்த நடிகர்.. தெலுங்கு யூடியூபர் பேச்சால் வெடித்த சர்ச்சை!
ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் இருப்பது போல தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட விமர்சகர்கள் உள்ளனர். அதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யூடியூப் விமர்சகர் ரகடி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் இல்லை என்றும் சிரஞ்சீவி தான் சிறந்த நடிகர் என்றும் ரகடி பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

திடீரென இப்படி ஒரு கம்பேரிசன் எழுவதற்கு பின்னணியில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர்.
கமல்ஹாசன் சிறந்த நடிகரா?: சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் நல்ல நடிகராகவும் பல தேசிய விருதுகளை வென்றவருமாக சினிமாவுக்கு வர ஆசைப்படும் பலரும் கமல்ஹாசனின் நடிப்பை பாடமாக கற்றுக்கொள்ளும் அளவுக்கு பல்வேறு வித்தியாசமான நடிப்பை பல படங்களில் கொடுத்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் நடிகர் இல்லை என்றும் அவர் ஒரு சிறந்த டெக்னீசியன் மட்டுமே என்றும் க்ரியேட்டிவ் ஜீனியஸ் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், சிறந்த நடிகர் இல்லை என ரகடி விமர்சித்துள்ளார்.
சிரஞ்சீவி தான்: மேலும், இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்றால் அது டோலிவுட் நடிகரான சிரஞ்சீவி தான் என ரகடி தனது வீடியோவில் பேசியுள்ளார். ரகடியின் வீடியோவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கமல் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், மலையாள சினிமா நடிகர்கள் தான் சிறந்த நடிகர்கள் என மலையாள ரசிகர்களும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி பெயர்களை கூறி வருகின்றனர். சிரஞ்சீவி நல்ல நடிகர் தான். ஆனால், கமல்ஹாசனை விட சிறந்த நடிகர் என சொல்லவே முடியாது என்றும் ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பிரபாஸ் படம் தான் காரணமா?: திடீரென்று தெலுங்கு யூடியூபர் கமல்ஹாசனையும் சிரஞ்சீவியும் கம்பேர் செய்து விமர்சிக்க காரணமே பிரபாஸின் கல்கி படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தான் எனக் கூறுகின்றனர். அடுத்த மாதம் கல்கி ஏடி 2898 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், சிரஞ்சீவி மற்றும் ராம்சரணுக்கு ஆதரவாக பிரபாஸை எதிர்க்கும் நோக்கிலேயே கமல்ஹாசன் குறித்த விமர்சனத்தை ரகடி முன் வைத்துள்ளார் என்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரகடி சொல்வது சரிதான்: சிரஞ்சீவி ரசிகர்கள் பலரும் ரகடி சொல்வது தான் சரி என்றும் கமல்ஹாசன் தொழில்நுட்பத்தை மட்டுமே கொண்டு வந்தார் என்றும் சிரஞ்சீவி அளவுக்கு மாஸாகவும் கிளாஸாகவும் அவரால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்த கலவை தான் சிரஞ்சீவி என கே. பாலசந்தரே ஒரு முறை சொல்லியுள்ளார் என சிரஞ்சீவி ரசிகர்கள் யூடியூபர் ரகடிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ் கிங்: கடந்த சில ஆண்டுகளாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகிறது என்றும் விக்ரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த கமல்ஹாசன் அடுத்து இந்தியன் 2 படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபிக்கப் போகிறார் என்றும் கல்கி படத்தில் வில்லனாக எப்படி மிரட்ட காத்திருக்கிறாரோ என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என வரிசையாக பல பெரிய படங்களில் கமல் நடித்து வருகிறார் எனக் கூறுகின்றனர். அந்த பக்கம் பார்த்தால், சிரஞ்சீவி மற்றும் திரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக விஸ்வம்பரா படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











