மகன் நடிக்கும் படத்தின் முக்கியமான ட்விஸ்ட் காட்சியைப் பற்றி உளறிய சிரஞ்சீவி!

By Vignesh Selvaraj

Recommended Video

ரங்கஸ்தலம் கதையை கசியவிட்ட சிரஞ்சீவி!- வீடியோ

விசாகபட்டிணம் : ராம் சரண், சமந்தா, ஆதி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'ரங்கஸ்தலம்'.

சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட சிரஞ்சீவி, 'ரங்கஸ்தலம்' படத்தின் முக்கியமான காட்சி பற்றி வாய் தவறி பேசிவிட்டார்.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

'ரங்கஸ்தலம்' விழாவில் ராம்சரண் அவரது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் படத்தின் முக்கியமான திருப்புமுனையைச் சொல்லி படக்குழுவினரை சிரஞ்சீவி அதிர்ச்சியடைய வைத்துவிட்டார்.

படம் பார்த்துவிட்டு வந்த சிரஞ்சீவி

படம் பார்த்துவிட்டு வந்த சிரஞ்சீவி

திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசுவதென்றால், அந்தப்படம் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொண்டோ அல்லது படத்தைப் பார்த்துவிட்டோ வருவது தான் சிரஞ்சீவியின் வழக்கம். அப்படித்தான் தனது மகன் ராம் சரண் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படத்தையும் அவர் பார்த்துவிட்டார்.

உளறிய சிரஞ்சீவி

உளறிய சிரஞ்சீவி

நிகழ்ச்சியில் பேசும்போது, படத்தில் நடிகர் ஆதி இறக்கும் காட்சியில் ராம் சரணின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது என படத்தின் முக்கியமான காட்சி பற்றி வாய் தவறி பேசிவிட்டார். சிரஞ்சீவியின் இந்தப் பேச்சு படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

பாதிக்காது

பாதிக்காது

'ரங்கஸ்தலம்' படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் சிரஞ்சீவியின் பேச்சு படத்தை பாதிக்காது. கிராமத்து கதையாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா கிராமத்து பெண்ணாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X