Keerthy Suresh: ஒய் திஸ் கொலவெறி.. கீர்த்தி சுரேஷ் கழுத்தை பிடித்து நெரித்த பிரபல நடிகர்.. ஏன்?

ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகை கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெரித்து விளையாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், ஸ்ருதிஹாசன், லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக போலா சங்கர் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சுரேஷ் விளையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

Chiranjeevi made a funny fight with Keerthy Suresh on Bholaa Shankar sets

திருப்பதியில் இருக்கேனே: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகம் ஆனாலும், சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் தான் அவரை ஸ்டார் நடிகையாக்கியது.

ரெமோ, சீமராஜா, பைரவா, சர்க்கார், சண்டக்கோழி 2, நடிகையர் திலகம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இந்த மாதம் மாமன்னன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கீர்த்தி சுரேஷ் போலா சங்கர் படத்திற்காக வேண்டிக் கொள்ள வந்ததாக கூறினார். தமிழில் பேசுங்கள் என கீர்த்தி சுரேஷிடம் பத்திரிகையாளர் ஒருவர் கோரிக்கை வைக்க, திருப்பதியில் இருக்கேனே என்று கூறி தமிழில் பேசுவதை தவிர்த்து விட்டு தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும்: அதே போல மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பத்திரிகையாளர்களை பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் எரிந்து விழுந்துள்ளார்.

எப்போ பாரு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுலேயே குறியாக இருக்கீங்க என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு நோஸ் கட் செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கோலிவுட்டில் ரிவால்வர் ரீட்டா, சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

கழுத்தை நெரித்த சிரஞ்சீவி: இந்நிலையில், சமீபத்தில் போலா சங்கர் செட்டில் நடிகர் சிரஞ்சீவி, தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் மூவரும் கேஷுவலாக பேசிக் கொண்டிருந்த போது, கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவியை கிண்டல் செய்ய, உடனடியாக அவர் கீர்த்தி சுரேஷின் கழுத்தை ஜாலியாக நெரித்து விளையாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வரும் நிலையில், தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X