ராஜமௌலியை புகழ்ந்த சிரஞ்சீவி… ஆச்சார்யா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா ?

ஹைதராபாத் : சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து இயக்குனர் Koratala Siva இயக்கிய படம் ஆச்சார்யா. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் பங்க்ஷன் ஏப்ரல் 23 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் தெலுங்கில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

விழாவில் கலந்து கொண்ட பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியை கௌரவித்த சிரஞ்சீவி சினிமாவைப் பற்றிய பல முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ராஜமௌலிக்கு பாராட்டு

ராஜமௌலிக்கு பாராட்டு

ஆச்சார்யா ரிலீஸ் பங்ஷனில் கலந்து கொண்ட ராஜமௌலியை நடிகர் சிரஞ்சீவி வானளாவிய அளவில் புகழ்ந்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் நடிக்கும்போது நான் நடித்த " ருத்ரவீணை" எனும் படத்தில் நடித்ததற்காக விருது வாங்க டெல்லிக்கு சென்றதாகவும், அங்கே தேநீர் விருந்தில் கலந்து கொண்டபோது அந்த அரங்கில் இந்தி சினிமா சார்ந்த புகைப்படங்கள் தவிர தென்னிந்திய திரைப்பட சார்ந்த புகைப்படங்கள் இல்லாததால் தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும், இதை அந்த சமயத்தில் ஹிந்து பத்திரிகையில் தான் பேசி இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமாவாக பார்க்கும் அவர்களுக்கு பாகுபலி எனும் படத்தின் மூலம் ராஜமௌலி பதில் தந்திருக்கிறார். இந்திய சினிமா ஒரு மதம் என்றால் அதில் மடாதிபதி நம் ராஜமௌலி இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என நெகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்திருக்கிறார்.

ஆச்சார்யா உருவான காரணம்

ஆச்சார்யா உருவான காரணம்

ராம்சரன் ஒரே நேரத்தில் Koratala Siva மற்றும் ராஜமவுலி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜமவுலி படத்தில் நடிக்கும்போது அந்த நடிகர் வேறு எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க முடியாது. அதனால் சிரஞ்சீவி Koratala Siva வை வீட்டுக்கு அழைத்து உங்கள் படத்தில் ராம் சரணுக்கு பதிலாக நான் நடித்தால் உங்களுக்கு ஓகேவா என கேட்க இயக்குனர் அதிக உற்சாகத்துடன் சரி என சொல்லியுள்ளார். ஆக ராஜமௌலி படத்தில் ராம்சரண் நடிக்க ராம்சரண் நடிக்க வேண்டிய படத்தில் சிரஞ்சீவி நடிக்கத் துவங்கியுள்ளனர். இதற்கிடையில் ஆச்சார்யா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராம் சரணை நடிக்க வைக்க முடிவு செய்து, ராஜமௌலியை கெஞ்சி இறுதியில் ராம்சரண் அதில் நடித்திருக்கிறார். இதையெல்லாம் சிரஞ்சீவி மேடையில் குறிப்பிட்டு ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனரின் நடிகராக

இயக்குனரின் நடிகராக

பொதுவாக எந்த இயக்குனர் சிரஞ்சீவியை இயக்கினாலும் அதில் அவர்களது தன்மை இருந்தாலும் பெரும்பாலும் அது சிரஞ்சீவி படம் ஆகவே இருக்கும். சண்டைக்காட்சிகள், பாடல்கள், நடனம், நகைச்சுவை, சென்டிமென்ட் என அவர் பார்முலா படமாகவே இருக்கும். இதில் அதுபோல இல்லாமல் இயக்குனர் படமாக இது இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும்போது " இந்த ஆச்சாரியா படத்தில் நான் எப்போதும் போல நடிப்பதை தவிர்த்து இயக்குனர் சொன்னதை செய்துள்ளேன், இல்லையென்றால் இது இன்னொரு முறை சிரஞ்சீவி படமாக வரும் என்பதால், நான் கொரடலா சிவா படங்களை தொடர்ந்து பார்ப்பதால், அவரது இயக்கம் எனக்கு பிடிக்கும் அதனால் அவர் சொல்வதை இதில் செய்து உள்ளேன் என கூறியுள்ளார்.

மகனை பாராட்டிய தந்தை

மகனை பாராட்டிய தந்தை

ஆச்சாரியா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தனது மகனுமான ராம் சரணை பற்றி பேசும் போது இயக்குனர் Koratala Siva வை குறிப்பிட்ட ஒரு நிகழ்வை பகிர்ந்துள்ளார். ஆச்சாரியா படத்தில் ஆரம்பத்தில் சிரஞ்சீவி கதாபாத்திரம் மட்டும் இருந்ததாகவும் அதன் பிறகு அதற்கு இணையான ஒரு கதாபாத்திரம் உருவானதும் அதில் வேறு யாரை நடிக்க வைத்தாலும் அது அவ்வளவு பாதிக்காது எனவும், தந்தை மகனான நீங்கள் இணைந்து நடித்தால் உருக்கமாக வரும் என முடிவு செய்துள்ளனர் . ஆனால் அதே சமயம் ராம்சரன் ராஜமௌலி RRR படத்தில் இருப்பதால் அவர் அனுமதித்த தேதிகளில் ராம்சரன் கதாபாத்திரம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண் தனது நடிப்புக்கான விருதை கண்டிப்பாக வாங்குவார் என சொல்லி, ஒரு கட்டத்தில் இதில் தான் தெரியாமல் ராம்சரன் படமாக எனக்கு தெரிந்தது என நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார் சிரஞ்சீவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X