நட்சத்திர ஜோடி திருமணம்.. குடும்பத்துடன் இத்தாலி பறந்த சிரஞ்சீவி, ராம்சரண்.. தீயாக பரவும் பிக்ஸ்!
ஹைதராபாத்: நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி திருமணம் வரும் நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், கோனிடேலா மற்றும் காமினேனி குடும்பத்தினர் விமானம் மூலம் இத்தாலி சென்றுள்ளனர்.
சசி குமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜை காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், வெளிநாட்டில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த விருப்பப்பட்ட ஜோடியினர் இத்தாலியில் திருமணத்தை வைத்துள்ளனர்.
வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம்: தமிழில் பிரம்மன், மாயவன் மற்றும் தணல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி நவம்பர் 1ம் தேதி இளம் நடிகர் வருண் தேஜ் உடன் திருமணம் செய்து கொள்ள உள்ளார். பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகன் தான் வருண் தேஜ். மேலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலிக்கு பறந்த சிரஞ்சீவி குடும்பம்: இத்தாலியில் உள்ள Borgo san Felice நகரத்தில் பிரம்மாண்டமாக நாளை வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மணமக்களுடன் சிரஞ்சீவி, ராம்சரண், உபாசனா மற்றும் குடும்பத்தினர் மொத்தமாக இத்தாலிக்கு சென்று இறங்கிய நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நிகழ்ச்சி நிரல்: 30ம் தேதியான நேற்று இரவு இத்தாலியில் காக்டெயில் பார்ட்டி நடைபெற்றது. 31ம் தேதியான இன்று ஹல்தி மற்றும் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை நவம்பர் 1ம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராம்சரண் வெளியிட்ட புகைப்படங்கள்: இத்தாலிக்கு திருமணத்திற்காக சென்ற இடத்தில் சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலாப் போஸ்ட்டாக வெளியிட்டுள்ளனர். நாளை லாவண்யா திரிபாதி திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தை திணற விட காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











