Chiranjeevi: சிரஞ்சீவிக்கு விருது.. இந்தியாவிலேயே இவருக்குத்தான் இந்த அங்கீகாரம்.. ரசிகர்கள் ஹேப்பி!

லண்டன்: தெலுங்கு சினிமா உலகில் மெகா ஸ்டார் என அறியப்படுபவர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கு சினிமா உலகில் மிகவும் மூத்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார். இவரது மகன் ராம் சரண் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருதை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்.

சிரஞ்சீவி, நமது தமிழ் சினிமாவில் எப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறாரோ, அதேபோல் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவரது குடும்பமே சினிமா பாரம்பரியக் குடும்பமாக மாறிவிட்டது. இவரது சகோதரர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியைத் தொடங்கி, தற்போது பாஜகவின் ஆதரவோடு, துணை முதலமைச்சராக ஆந்திராவில் உள்ளார். பவன் கல்யாணின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருவதால், அரசியல் தளத்தில் அவர் பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறார்.

Chiranjeevi Receives Lifetime Achievement Award At House Of Commons UK Heart Filled With Gratitude

அதேபோல், அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில், சிரஞ்சீவி பேசும்போது, ராம் சரணிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கலாம் என இருக்கிறேன். அதாவது ராம் சரண் மகன் பெற்றுக் கொள்ள வேண்டும். நமது வீட்டில் எல்லோரும் பெண்களாக உள்ளார்கள். குடும்பத்தின் லெகசியை நீட்டிக்கச் செய்ய ஆண் குழந்தை பெற்றுக் கொடு எனக் கேட்க இருக்கிறேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தது.

சிரஞ்சீவி: இந்நிலையில் சிரஞ்சீவிக்கு லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவர்தான் என்பதால், இவரது ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக சிரஞ்சீவி என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Chiranjeevi Receives Lifetime Achievement Award At House Of Commons UK Heart Filled With Gratitude

விருது: இப்படியான நிலையில் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் விருது வாங்கிய போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், " இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள், இராஜதந்திரிகள் என பலரால் கௌரவிக்கப்பட்டதற்கும் அவர்களின் அன்பான வார்த்தைகள், பணிவு என அனைத்திற்காகவும் எனது இதயம் மகிழ்ச்சியாலும் நன்றியாலும் நிறைந்துள்ளது. Team Bridge India வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதால் மனம் அடைந்த நெகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

Chiranjeevi Receives Lifetime Achievement Award At House Of Commons UK Heart Filled With Gratitude
நன்றிகள்: இந்த நேரத்தில் எனது அன்பான ரசிகர்கள், எனது ரத்த சகோதரர்கள், ரத்த சகோதரிகள், எனது திரைப்படக் குடும்பம், நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள். மேலும் எனது பயணத்திற்கு எல்லா வகையிலும் பங்களித்தவர்களுக்கும், அதேநேரத்தில் நான் செய்துவரும் பல மனிதாபிமான செயல்களில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த மரியாதை எனது பணியை அதிக வீரியத்துடன் தொடர எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் உங்கள் அழகான வாழ்த்துச் செய்திகளுக்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X