'உங்கள் தனித்துவமான ஸ்டைலால்..' நடிகர் ரஜினிகாந்துக்கு 'மெகாஸ்டார்' சிரஞ்சீவி ஜில் வாழ்த்து!

By

சென்னை: எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு அவர்
நண்பர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ந‌டிகர் ரஜினிகாந்த், தனது 70-வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார்.

இதையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும்
வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் இந்த பிறந்த நாளை ரசிகர்கள் மற்றும் அவருடைய மன்ற நிர்வாகிகள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் பலர், நள்ளிரவில் குவிந்தனர். அங்கேயே கேக் வெட்டி, ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

 காமன் டிபி

காமன் டிபி

திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக
வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பிறந்த நாளுக்காக,
சிறப்பு காமன் டிபியை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இயக்குனர்
லிங்குசாமி, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ராஷ்மிகா மந்தனா உட்பட பல
பிரபலங்கள் வெளியிட்டனர்.

 அரசியல் என்ட்ரி

அரசியல் என்ட்ரி

ஆரம்ப காலம் முதல் பாட்ஷா, படையப்பா, தர்பார் என அவர் நடித்த பல சினிமா
படங்களின் புகைப்படங்களுடன் ரஜினியின் அரசியல் என்ட்ரி வரை பல்வேறு
விஷயங்கள் இந்த காமன் டிபியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில்
#HappyBirthdayRajinikanth மற்றும் #Annaatthe ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.

 அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

நடிகை ராதிகா சரத்குமார், பிரசன்னா, விக்ரம் பிரபு, ஹரீஷ் கல்யாண், இசை
அமைப்பாளர் டி.இமான் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட சினிமா
பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பர் சிரஞ்சீவி ட்விட்டரில்,
அவருக்கும் அவரது அரசியல் பிரவேசத்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 தனித்துவ ஸ்டைல்

தனித்துவ ஸ்டைல்

அதில், அன்புள்ள நண்பருக்கு, இனிய 70 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அரசியல் முயற்சியில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். தனித்துவமான ஸ்டைலால் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளீர்கள். அந்த தனித்துவமான பாதையில், அவர்களுக்கு சேவை செய்வீர்கள் என நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X