bhola shankar: அய்யய்யோ என்ன இப்படி ஆகி போச்சு.. போலா ஷங்கர் வாஷ் அவுட்.. நஷ்டத்தில் தயாரிப்பாளர்!

சென்னை: போலா ஷங்கர் படம் தோல்வி அடைந்ததால் சிரஞ்சீவி வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம் வேதாளம் படம் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது.

Chiranjeevi returns his salary back to bhola shankar producer Anil Sunkara

இந்த படத்தில் லஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அஷ்வின் காக்கமனு, ராகுல் தேவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

வேதாளம்: அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், அஜித் முதல் பாதியில் முரட்டுத்தனமான வில்லனாகவும், இரண்டாம் பாதியில் பாசத்திற்காக ஏங்கி உருகும் அண்ணனாகவும் நடித்திருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. வேதாளம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விவேகம், விஸ்வாசம் படம் வெளிவந்தன.

போலா ஷங்கர்: வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில், தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகுபாபு, முரளி சர்மா, ரவிசங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Chiranjeevi returns his salary back to bhola shankar producer Anil Sunkara

மோசமான விமர்சனம்: ஆகஸ்ட்11ந் தேதி வெளியான இத்திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. முதல் நாளில் படம் ரூ.16 கோடி வசூலித்த போதும், படத்திற்கு எழுந்த படுமோசமான விமர்சனங்களால் வசூல் குறைய தொடங்கி 9 நாட்களில் வெறும் 30 கோடி வசூலை பெற்றது. ஆனால், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் வசூலை அள்ளி வருகிறது.

குவியும் பாராட்டு: போலா ஷங்கர் படத்தால் கடுமையாக நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர் அனில் சன்கராவிடம் நடிகர் சிரஞ்சீவி வாங்கிய சம்பளத்தை திருப்பிக்கொடுத்துள்ளார். படம் ஓடவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும், தன்னால் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என்று, பணத்தை திருப்பிக் கொடுத்த சிரஞ்சீவியின் செயலை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X