அப்பா -மகன் முதன்முறையாக இணையும் படம்... ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஐதராபாத் : நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து முதல்முறையாக நடித்துள்ள படம் ஆச்சார்யா.

Recommended Video

Blue sattai Maran Funny speech in Anti Indian Movie Trailer Lauch Event | Tamil Talkies

ராம்சரணே இந்தப் படத்தை தயாரித்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது இறுதி செய்துள்ளனர்.

ஆச்சார்யா படம்

ஆச்சார்யா படம்

நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ஆச்சார்யா. சிரஞ்சீவிக்கு என டோலிவுட்டில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அதேபோல ராம்சரணுக்கும் ரசிகர்கள் காணப்படும் நிலையில் இருதரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரட்டல சிவா இயக்கம்

கொரட்டல சிவா இயக்கம்

படத்தை கொரட்டல சிவா இயக்கியுள்ள நிலையில் பூஜா ஹெக்டே மற்றும் காஜல் அகர்வால் படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். ஜனவரியில் இந்தப் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ராம்சரணின் நடிப்பில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7ல் ரிலீசாக உள்ளதால் மோதலை தவிர்க்க டிசம்பரில் ரிலீசை திட்டமிட்டனர்.

பிப்ரவரியில் ரிலீஸ்

பிப்ரவரியில் ரிலீஸ்

ஆனால் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் டிசம்பர் 17ம் தேதி ரிலீசாக உள்ளதாலும் அந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுவதாலும் அந்த தேதியையும் நிராகரித்துள்ளது படக்குழு. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

அடுத்த பிப்ரவரி 4ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ள நிலையில் அதிகமான பொருட்செலவில் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் முதல் முறையாக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ராம்சரண் அறிவிப்பு

ராம்சரண் அறிவிப்பு

இதற்கான போஸ்டரை தற்போது ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிரஞ்சீவி கையில் ஆயுதத்துடன் நடந்து வருவது போலவும் பின்னணியில் ராம்சரண் நிழலாக காணப்படுவது போலவும் காணப்படுகிறது. மேலும் சிரஞ்சீவி துப்பாக்கியுடன் முன்னே நடந்து போவது போலவும் அவரை ராம்சரண் பின்தொடர்வது போலவும் உள்ளது.

இரண்டு கதாநாயகிகள்

இரண்டு கதாநாயகிகள்

படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் படம் சிறந்த வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் பூஜா ஹெக்டே தற்போது டோலிவுட்டின் சிறப்பான கதாநாயகியாக உள்ளார். அவருடன் காஜல் அகர்வாலும் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X