மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிறந்த நாள்... ஒன்று திரண்டு வாழ்த்திய திரைபிரபலங்கள் !

சென்னை : நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிரஞ்சீவி.

இவர் இந்தியத் திரையுலகினர் அனைவருக்குமே மிக நெருங்கிய நண்பர். இன்று (ஆகஸ்ட் 22) இவர் தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

1970-களிலிருந்து இப்போது வரை நடித்து வருகிறார். இடையே சில காலம் அரசியல் பிரவேசத்துக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்தார். பின்பு கட்சியைக் கலைத்துவிட்டு, தற்போது மீண்டும் திரையுலகிலேயே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இவரது மகன் ராம்சரணும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

ஆச்சாரியா

ஆச்சாரியா

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'ஆச்சாரியா' படத்தில் நடித்து வருகிறார். இது சிரஞ்சீவியின் 152-வது திரைப்படமாகும். இப்படம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,மோகன்லால் நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் 'காட்ஃபதர்' என்ற டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டனர். அதேபோல வேதாளம் திரைப்படத்தின் தலைப்பையும் மகேஷ்பாபு வெளியிட்டார். அப்படத்திற்கு, போலா சங்கர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

சிரஞ்சீவின் இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரசிகர்களும் பிரத்யேக போஸ்டர்கள் வடிவமைத்து சமூக வலைதளத்தில் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். பலரும் வாழ்த்துத் தெரிவிப்பதால் #HBDMegastarChiranjeevi, #HBDChiranjeevi மற்றும் #HBDMegastar ஆகிய ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

ராதிகா சரத்குமார் வாழ்த்து

ராதிகா சரத்குமார் வாழ்த்து

ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, #HBDMegastarChiranjeevi #Megastar சிரஞ்சீவி ஒரு சிறந்த மனிதர், குடும்ப நண்பர், நீங்கள் எப்போதும் என் அருமைச் சிரா என்று பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

ராதா பிறந்த நாள் வாழ்த்து

ராதா பிறந்த நாள் வாழ்த்து

ஏராளமான திரைப்படங்களில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த ராதா, அவருக்கு வாழ்த்துக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு நடிகர் ஸ்டார் ஆகலாம் ஆனால் மெகா ஸ்டார் ஆவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்றார். சினிமா , குடும்பம் இரண்டையும் சமமாக கொண்டு சென்று ரசிகர்ளின் மனதிலும் நீங்க இடம் பிடித்துள்ளார் என்று நடிகை ராதா நெகிழ்ந்து வாழ்த்து கூறினார்.

லவ் யூ சார்

லவ் யூ சார்

சிரஞ்சீவி காரு, உங்கள் புன்னகை, உங்கள் அரவணைப்பு, உங்கள் அழகான அன்பு எங்கள் ஆன்மாவைத் தொடுகிறது. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். லவ் யூ சார் என நடிகை குஷ்பு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

சிரஞ்சீவி அண்ணா

சிரஞ்சீவி அண்ணா

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சிரஞ்சீவிக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிரஞ்சீவி அண்ணா, பெயருக்கு ஏற்றார் போல நீங்க சிரஞ்சீவிதான் என்றார். மேலும், நீங்கள் செய்த சாதனை, தொண்டு, உங்களின் அன்பு, உங்களின் அரவணைப்பு அனைத்தும் என்றும் சிரஞ்சீவிதான். உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Array

Array

நடிகை நிதி அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், One & Only Megastar இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் பலருக்கு உண்மையான உத்வேகம், இந்த பிறந்த நாள், உங்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X