சிரஞ்சீவி மகளுக்கு 2வது திருமணம்... சித்தப்பா பவன் கல்யாண் வரவில்லை!

By Manjula

பெங்களூர்: சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவின் 2 வது திருமணம் நேற்று பெங்களூரில் கோலாகாலமாக நடந்து முடிந்தது.

பெங்களூரில் உள்ள சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ஸ்ரீஜா-கல்யாண் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீஜா

ஸ்ரீஜா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கடந்த 2007 ம் ஆண்டு வீட்டை விட்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது தந்தை மற்றும் உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். காதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவரை விவாகரத்து செய்த ஸ்ரீஜா மீண்டும் பெற்றோரிடம் வந்து தங்கிவிட்டார்.

2 வது திருமணம்

சில மாதங்களுக்கு முன் ஸ்ரீஜாவின் பெற்றோர் அவருக்கு 2 வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாப்பிள்ளை தேடிவந்தனர். முடிவில் சிரஞ்சீவியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபரின் மகனான கல்யாண் என்பவரை மணமகனாக தேர்வு செய்தனர். கல்யாண் ஒரு என்ஆர்ஐ தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது

பெங்களூரில்

பெங்களூரில்

நேற்று ஸ்ரீஜா-கல்யாண் திருமணம் பெங்களூரில் உள்ள சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் கோலாகாலமாக நடந்தது. இதில் சிரஞ்சீவி குடும்பத்தினர் தவிர்த்து நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சிரஞ்சீவி சகோதரர் பவன் கல்யாண் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்ததால் இந்தத் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

வரவேற்பு

வரவேற்பு

ஸ்ரீஜா-கல்யாண் திருமண வரவேற்பு வருகின்ற 30 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹையாத் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த வரவேற்புக்கு நடிக, நடிகையர் மற்றும் அரசியல்வாதிகளை அழைக்க சிரஞ்சீவி திட்டமிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X