Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சிரஞ்சீவியின் காட்ஃபாதர்..முக்கியமான தகவலை சொன்ன படக்குழு!
சென்னை : மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள காட்ஃபாதர் திரைப்படம் குறித்த முக்கியமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அரசியல் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யதேவும், கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான்கானும் நடித்துள்ளனர்.
இப்படம் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
எட்டு திக்கும்..புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம்..விக்ரம் ட்வீட்!
லூசிபர்
2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார். நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்ஷனை அள்ளிய திரைப்படம் இது. மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். லூசிபர் படத்தின் 2ம் பாகமும் தயாராக உள்ளது.
காட்ஃபாதர்
லூசிபர் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் உருவாகி உள்ளது. நடிகர்,ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சத்யதேவ், சுனில், புரி ஜெகன்னாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.
கவனம் ஈர்த்த டீசர்
மிகப் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை ராம்சரண், ஆர்பி சவுத்ரி, எம்.வி பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசையமைக்க ஒளிப்பதிவை நீரவ்ஷா கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
முக்கிய தகவல்
இந்நிலையில், காட்ஃபாதர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தமன் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்பாடலின் ப்ரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆச்சாரியா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், காட்பாதர் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
-
Aadujeevitham Day 1 collection: ஒரு சராசரி மனிதனின் உண்மைக்கதை.. ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல்!
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்