என்னது... அடுத்த விவாகரத்து சர்ச்சை... கணவரின் பெயரை நீக்கிய பிரபல நடிகரின் மகள்!
சென்னை : தனுஷ் , ஐஸ்வர்யாக விவாகரத்து பூதாகரமாக பரவி வரும் நேரத்தில் அடுத்த விவாகரத்து குறித்த வதந்தி இணையத்தில் தீயாகபரவி வருகிறது.
Recommended Video

சமந்தா பாணியில் நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி உள்ளார்.

சிரஞ்சீவியின் மகள்
சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா தனது கணவர் கல்யாண் தேவிடமிருந்து பிரிந்துவிட்டதாக பரபரப்பான வதந்திகள் பரவி வந்தன. இதில் விவாகரத்து வதந்திகள் குறித்து சிரஞ்சீவியும் அவரது மகள ஸ்ரீஜாவும் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் மௌமாக இருந்தனர்.

கணவர் பெயரை நீக்கினார்
இந்நிலையில், ஸ்ரீஜா தனது இன்ஸ்டாகிராமிலிருந்து தனது கணவர் பெயரை நீக்கி உள்ளார். ஸ்ரீஜா திருமணத்திற்கு பின்பு தனது கணவர் பெயரை சேர்த்து "ஸ்ரீஜா கல்யாண்" என வைத்திருந்தார். தற்போது தனது கணவர் பெயரை நீக்கிவிட்டு தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என மாற்றியுள்ளார். இதனால் இவர்களின் பிரிவது உறுதியாகிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

கோலாகலமாக நடந்த திருமணம்
2016ம் ஆண்டு பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் ஸ்ரீஜா கல்யாண் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் தென் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். கல்யாண், ஸ்ரீஜா தம்பதிகளுக்கு நவிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

19 வயதில் முதல் திருமணம்
ஸ்ரீஜா கல்லூரியில் படிக்கும் போது சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீஜா முதல் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 19 வயதாகும். அவரது மாமியார் வரதட்சணை கேட்பதாகக் கூறியதை அடுத்து, சட்டப்பூர்வமாக சிரிஷ் பரத்வராஜிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அவர்களுக்கு நிவிரிதி என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications