மரணமடைந்த ஹீரோ மனைவி கர்ப்பம்.. குழந்தையை எதிர்பார்த்த நேரத்தில் சோகம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

பெங்களூரு: மாரடைப்பால் மரணமடைந்த ஹீரோவின் மனைவி நடிகை மேக்னாராஜ் கர்ப்பமாக இருக்கிறார்.

பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 39.

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

நெஞ்சுவலி

நெஞ்சுவலி

இதையடுத்து கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக்கான அஜித் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் இவருக்கு, நேற்றுமுன் தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து பெங்களூர் ஜெயா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி

சிகிச்சை பலனின்றி


அவருக்கு மூச்சுத் திணறலும் இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினரும் கன்னட திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல்
பாசவங்குடியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நடிகை மேக்னா ராஜ்

நடிகை மேக்னா ராஜ்

கன்னட நடிகர் யஷ் உட்பட பிரபல நடிகர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், பிரபல நடிகை ஆவார். இருவரும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேக்னாராஜ், தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நான்கு மாத கர்ப்பம்

நான்கு மாத கர்ப்பம்

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் இப்போது தெரியவந்துள்ளது. அவர் நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தையை எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருப்பது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமலதா அம்பரீஷ்

சுமலதா அம்பரீஷ்

இந்த விஷயத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து சிரஞ்சீவி சார்ஜாவும் மேக்னா ராஜூம் வெளியே அறிவிக்க இருந்தனர். அதற்கு முன்பாக சில மூத்த நடிகர், நடிகைகளிடம் இதை தெரிவித்து ஆசி பெற்றுள்ளனர். நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமலதாவும் நடிகை, தாராவும் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X