அர்ஜுனின் 'கிரி' ரீமேக்.. ரீ ரிலீஸில் வரவேற்பை பெற்ற சிரஞ்சீவி சார்ஜா படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

By

பெங்களூரு: ரி ரிலீஸ் செய்யப்பட்ட மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.

இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

தடம் தசகுணம்

தடம் தசகுணம்

இதையடுத்து கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக்கான அஜித் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். லாக்டவுனுக்கு முன் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடந்த சம்பவம்

நடந்த சம்பவம்

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார். இந்த மரணம் அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் செல்ல அவர் தயாராகி வந்த நிலையில் இப்படி நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடைசி ரிலீஸ்

கடைசி ரிலீஸ்

அவர் மரணமடைந்தபோது, சிரஞ்சீவி சார்ஜா மனைவி மேக்னா ராஜ், நான்கு மாத கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த மாதம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. பெயர் சூட்டுவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா நடித்து கடைசியாக ரிலீஸ் ஆன படம், சிவார்ஜுனா.

கிரி பட ரீமேக்

கிரி பட ரீமேக்

இது தமிழில் அர்ஜுன், ரீமா சென், வடிவேலு நடித்து சூப்பர் ஹிட்டான கிரி படத்தின் ரீமேக். கடந்த மார்ச் 12 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆன நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தை இப்போது மீண்டும் ரிலீஸ் செய்துள்ளனர்.

வேறொரு உணர்வு

வேறொரு உணர்வு

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சினிமா தியேட்டர்கள் கர்நாடகாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதையடுத்து சிவார்ஜுனா படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர். மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவை இப்போது படத்தில் பார்ப்பது வேறொரு உணர்வை தருகிறது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

சிவா தேஜாஸ்

சிவா தேஜாஸ்

இந்தப் படம் மீண்டும் ரிலீஸ் ஆன முதல் நாளில், பெங்களூரில் சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தினர் தியேட்டரில் ரசிகர்களுடன் இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர். சிவா தேஜாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அம்ருதா ஐயங்கார், கிஷோர், ரவிகிஷன், தாரா,அவினாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X