'சிரு, என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள்..' கணவர் மறைவுக்குப் பின் மேக்னா ராஜ் உருக்கமான போஸ்ட்!

By

சென்னை: மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி, மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள உருக்கமான போஸ்ட் வைரலாகி வருகிறது.

Recommended Video

Meghana Raj Emotional Message | I Love You CHIRU

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். அவருக்கு வயது 39.

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், கன்ந்த்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

இப்போது நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

பண்ணை வீட்டில்

பண்ணை வீட்டில்

இந்திய சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். இவர் தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். சிரஞ்சீவி சார்ஜா மறைந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு உருக்கமான பதிவு ஒன்றை நடிகை மேக்னா ராஜ், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

எவ்வளவு முக்கியம்

எவ்வளவு முக்கியம்

சிரு, பல முறை முயற்சித்தும் உங்களிடம் சொல்ல நினைத்ததை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகில் உள்ள அனைத்து வார்த்தைகளாலும் விவரித்துவிட முடியாது. என் காதலன், தோழன், என் பார்ட்னர், என் குழந்தை, என் நம்பிகை, என் கணவர். நீங்கள் இந்த எல்லாவற்றையும் விட மேலானவர். என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள், சிரு.

ஆன்மாவை தாக்குகிறது

ஆன்மாவை தாக்குகிறது

ஒவ்வொரு முறையும் வாசலைப் பார்க்கும்போது, 'நான் வந்துட்டேன்' என்று நீங்கள் சொல்லும் வார்த்தையை கேட்காதச் சூழலில், புரிந்துகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவை தாக்குகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் உங்களை தொட முடியாதபோது, நான் மூழ்குவதை போல உணர்கிறேன், மெதுவாகவும் வலியோடும் செல்கிற ஆயிரம் இறப்புகளை போல.

மாயம் நிகழ்வதாக

மாயம் நிகழ்வதாக

ஆனால் உடனடியாக என்னைச் சுற்றி ஒரு மாயம் நிகழ்வதாக உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் பலவீனமாக இருக்கும் போதெல்லாம், நீங்கள் பாதுகாக்கும் தேவதை போல வந்து நிற்பீர்கள். நீங்கள் என்னை அதிகமாக விரும்பிய காரணத்தால்தான் என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லவில்லை. இல்லையா? நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை.

மீண்டும் பார்க்க

மீண்டும் பார்க்க

அந்த இனிமையான அதிசயத்துக்கு நன்றி கடன்பட்டவளாக இருக்கிறேன். குழந்தையின் வடிவில், உங்களை இந்தப் பூமிக்கு மீண்டும் அழைத்து வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். உங்கள் புன்னகையை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அறை முழுவதும் ஒளிரச் செய்யும் உங்கள் சிரிப்பை காண ஆர்வமாக இருக்கிறேன்.

இறுதி மூச்சு

இறுதி மூச்சு

நான் உங்களுக்காக காத்திருப்பேன். நீங்கள் மற்றொரு புறம் எனக்காகக் காத்திருக்கிறீர்கள். என் இறுதி மூச்சு இருக்கும்வரை வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் என்னுடனேயே இருக்கிறீர்கள். ஐ லவ் யூ! இவ்வாறு கூறியுள்ளார். கூடவே இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X