“எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது’’..அப்பா போட்டோவை தொட்டுப் பார்க்கும் மகன்..கண்கலங்கிய மேக்னா!

சென்னை : மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நினைவிடத்திற்கு குழந்தையுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்
நடிகை மேக்னா.

Recommended Video

Superstar மகளை தொடந்து Megastar மகளும் விவகாரத்தா?? | Sriji Konidela Removes her husband name

நடிகை மேக்னா ராஜூம் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாயும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். இதையடுத்து, 2018ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 'ஷிவார்ஜுனா' என்ற படத்தில் நடித்து இருந்தார்.

சிரஞ்சீவி சர்ஜா

சிரஞ்சீவி சர்ஜா

இதையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா தனது வீட்டில் குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சை பிடித்தபடி சாய்ந்தார். சற்று நேரத்தில் சிரஞ்சீவி சுயநினைவை இழந்து மயங்கினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

7 மாத கர்ப்பிணி

7 மாத கர்ப்பிணி

39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்தது கன்னட திரையில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சர்ஜா இறந்த போது அவரது மனைவி மேக்னா ராஜ் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தன் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். அந்த நேரத்தில் மேக்னாவின் நிலையை பார்த்து கல் நெஞ்சமும் கலங்கியது.

புகைப்படத்திற்கு முன் வளைகாப்பு

புகைப்படத்திற்கு முன் வளைகாப்பு

இதையடுத்து, மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளார். அவ்வப்போது கணவர் புகைப்படத்தை குழந்தைக்கு காட்டி இவர் தான் அப்பா என கூறி வருகிறார். மேக்னா தனது வளைகாப்பையும் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்திற்கு முன் நின்றே நடத்திக் கொண்டார்.

எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது

எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது

இந்நிலையில், சிரஞ்சீவி சர்ஜாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஜூன் 6ந் தேதி அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. அதற்கு தனது மகன் ராயன் ராஜ் சர்ஜாயுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் மேக்னா. அப்போது தன் குழந்தைக்கு இவர் தான் அப்பா என்று அவரது புகைப்படத்தை காட்டி கண் கலங்கினார் மேக்னா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது என்று பலரும் கலங்கிய மனதுடன் மேக்னாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X