தரமாக வந்த ‘காட்ஃபாதர்’ படத்தின் டீசர் அப்டேட்: சில் பண்ண ரெடியாக இருக்கும் சிரஞ்சீவி ரசிகர்கள்

ஐதராபாத்: சிரஞ்சீவி தற்போது 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'காட்ஃபாதர்' படத்தில் நடித்து வருகிறார்.

மோகன் ராஜா இயக்கும் இந்தப் படத்தில் சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், 'காட்ஃபாதர்' படத்தின் டீசர் குறித்து படக்குழு தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

டோலிவுட்டின் மெகாஸ்டார்

டோலிவுட்டின் மெகாஸ்டார்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, டோலிவுட் ரசிகர்களால் மெகா ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவரது படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே பெரிய வரவேற்பு கிடைக்கும். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ், இந்தி, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது டோலிவுட்டை கலக்கி வரும் இளம் ஹீரோவான ராம் சரண், சிரஞ்சீவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்காக காத்திருக்கும் சிரஞ்சீவி

வெற்றிக்காக காத்திருக்கும் சிரஞ்சீவி

தெலுங்கு சினிமா உலகில் அசைக்க முடியாத நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, சில வருடங்களாக தரமான சூப்பர் ஹிட் படத்திற்காக காத்திருக்கிறார். சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், தற்போது அவர் நடித்து வரும் 'காட்ஃபாதர்' படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

லூசிபர் டூ காட்ஃபாதர்

லூசிபர் டூ காட்ஃபாதர்

சிரஞ்சீவி நடிக்கும் 'காட்ஃபாதர்' திரைப்படம், மலையாளத்தில் பிரமண்டமான வெற்றிப் பெற்ற 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது. பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான 'லூசிபர்' படத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மோகன்லால் கேங்ஸ்டராகவும் அரசியல்வாதியாகவும் செம்ம மாஸ் காட்டியிருப்பார். மலையாளத்தில் 200 கோடி வசூலில் இணைந்தது, 'லூசிபர்' படம் தான் என சொல்லப்படுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார்

மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வரும் 'காட்ஃபாதர்' படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் கமிட் ஆகியுள்ளார். லூசிபர் படத்தில் பிருத்விராஜ் நடித்த கேரக்டரில், தெலுங்கில் சல்மான் கான் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில், தெலுங்கில் நயன்தாரா நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக சல்மான் கான் முதன்முறையாக தென்னிந்திய மொழித் திரைப்படத்தில் நடிப்பது, ரசிகர்களை ரொம்பவே எதிர்பார்க்க வைத்துள்ளது.

மிரட்டலான டீசர் அப்டேட்

மிரட்டலான டீசர் அப்டேட்

இந்நிலையில், 'காட்ஃபாதர்' படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் 22ம் தேதி சிரஞ்சீவி தனது 67வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை சிறப்பு செய்யும் விதமாக, ஆக.21ம் தேதி 'காட்ஃபாதர்' படத்தின் டீசர் வெளியாகிறது. இந்த அறிவிப்புடன் சால்ட் & பெப்பர் லுக்கில் சிரஞ்சீவியின் அசத்தலான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டரையும், 'காட்ஃபாதர்' டீசர் அப்டேட்டையும் சிரஞ்சீவியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X