Chiranjeevi: “எவ்ளோ நாள் நடிக்குற மாதிரி ஏமாத்துறது.. ” ரசிகர்களை பங்கம் செய்த சூப்பர் ஸ்டார்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி நடிப்பில் அடுத்தடுத்து காட்ஃபாதர், ஆச்சர்யா, போலா ஷங்கர், வால்டர் வீரய்யா படங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தனது கேரியர் பற்றியும் நடிப்பு குறித்தும் சிரஞ்சீவி மனம் திறந்துள்ளார்.
அவரது கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை தாக்குவதை போல இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்ற முடியாது: தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக சிரஞ்சீவி மாஸ் காட்டி வரும் நிலையில், அவரது மகன் ராம் சரணும் தற்போது டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.
ஆச்சார்யா, காட்ஃபாதர், போலா சங்கர், வால்டையர் வீரைய்யா என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் சிரஞ்சீவி. இவைகளில் காட்ஃபாதர் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது, மற்ற படங்களுக்கு நல்ல ஓபனிங் இருந்தும், பாக்ஸ் ஆபிஸில் புஸ்வானமானது. இதனால், ஆச்சார்யா, போலா சங்கர் ஆகிய படங்களுக்காக வாங்கிய சம்பளத்தில், சிரஞ்சீவி சில கோடிகளை தயாரிப்பாளருக்கு திருப்பிக்கொடுத்தார்.
இந்நிலையில், தனது கேரியர் பற்றியும் தொடர்ந்து நடிக்கவிருப்பது குறித்தும் சிரஞ்சீவி மனம் திறந்துள்ளார். அதில், "இன்னும் எவ்ளோ நாள் தான் ஷூட்டிங் போய் கஷ்டப்பட்டு டான்ஸ் எல்லாம் ஆட முடியும். எப்படி முயற்சித்தாலும் ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் தான் கஷ்டப்படுகின்றனர். அதனால், இனிமேல் சும்மா ஷூட்டிங் மட்டும் போய்ட்டு வரலாம் என நினைப்பதாக" கூறியிருந்தார்.
மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா மாஸாக நடந்தோமா அதற்கு நல்ல பிஜிஎம் மட்டும் போட்டு ரசிகர்களை திருப்திபடுத்திவிட்டு வந்துவிடலாம் எனவும், தயாரிப்பாளர் சரியாக சம்பளம் மட்டும் கொடுத்தால் போதும் என்றும் சிரஞ்சீவி பேசியுள்ளார். அவரது இந்த கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை அட்டாக் செய்வதை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால், இந்தப் படம் கதை, திரைக்கதை, ரஜினியின் நடிப்பு என எதுவுமே இல்லை என்றும், சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், நெல்சனின் மேக்கிங், அனிருத்தின் பிஜிஎம் மட்டுமே ஜெயிலர் வெற்றிப்பெற காரணம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக ரஜினியால் டான்ஸ் கூட ஆட முடியாமல் ஜெயிலரில் வந்து சென்றார். இதனை தான் சிரஞ்சீவி கலாய்த்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











