அவர் கால் தூசுக்கு சமம்.. அசிங்கமான பதிவு.. கொந்தளித்த சிரஞ்சீவியின் மருமகள்!

சென்னை: மெகா ஸ்டார் ராம் சரண் - உபாசனா தம்பதியினருக்கு ஜனவரி 31ஆம் தேதி, ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் என இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள ராம் சரணின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் சிரஞ்சீவி பற்றி பரவி வரும் ஒரு மோசமான செய்திக்கு அவரின் மருமகள் பதில் சரியான பதில் அளித்துள்ளார்.

ராம் சரண் - உபாசனா தம்பதியினருக்கு குழந்தை பிறப்புக்காக மருத்துவமனையில் அனுமதித்தவுடன், சிரஞ்சீவி - சுரேகா தம்பதியினர் மருத்துவமனையிலேயே இருந்து பேரனையும் பேத்தியையும் பார்த்து மகிழ்ந்தனர். உபாசனாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும், தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் நலமாக இருப்பதாக சிரஞ்சீவி முதலில் ட்வீட் செய்தார். இதனால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் ராம் சரண் - உபாசனா தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Chiranjeevi Ram charan
Photo Credit:

ஆண் வாரிசு: அதே நேரம் , சிலர் சமூக வலைதளங்களில் சிலர் சிரஞ்சீவியை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது, ராம் சரணுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட காலமாக விரும்பினர். சிரஞ்சீவி கூட தனது வாரிசு தொடர வேண்டும் என்ற ஆசையில், ராம் சரணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோவை வைத்துத்தான் தற்போது அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர், சமூக வலைதளத்தில் சிரஞ்சீவியை கடுமையான விமர்சித்துள்ளார். அதில், ராம் சரண் - உபாசனாவின் முதல் குழந்தையான கிளின்காரா பிறந்த போது கூட சிரஞ்சீவி இவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை, ஆனால், இப்போது ஆண் குழந்தை பிறந்ததால் அதிக மகிழ்ச்சியில் சிரஞ்சீவி இருக்கிறார் என பதிவிட்டு இருந்தார்.

அவரின் கால் தூசி: இந்த ட்வீட் இணையத்தில் வைரலான நிலையில், சிரஞ்சீவின் மருமகள் லாவண்யா திரிபாதி, தனது எக்ஸ் தளபக்கத்தில், கடுமையாக பதிலளித்துள்ளார். அதில், "இப்படிப்பட்ட ட்வீட்களை நான் பொதுவாக புறக்கணித்து விடுவேன். ஆனால், உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் அசிங்கமான பதிவு. ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நீங்கள் சங்கடமாக மாற்றிவிட்டீர்கள். சிரஞ்சீவி, தனது குடும்ப பெண்களுடன், குறிப்பாக பேத்திகளுடன் எப்படி நடந்து கொள்கிறார் என்பது உங்களுக்கு தெரியாது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை, காட்டும் அன்பு ஒரு சதவீதத்தை கூட எந்த ஆண்களும் செய்யமாட்டார்கள். தெரியாத விஷயங்களைப் பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது என்று லாவண்யா திரிபாதி எச்சரித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X