twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் தெலுங்கு வெர்ஷன்ல சிரஞ்சீவியா?: அதனாலதான் சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னாரா மணிரத்னம்

    |

    ஐதராபாத்: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.

    Recommended Video

    AR Rahman | சர்வதேச எல்லைகளைக் கடந்த AR Rahman-னின் 30 ஆண்டுகள் *Kollywood

    இப்படத்தின் 'சோழா சோழா' என்ற இரண்டாவது பாடல் நேற்று ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விஜய் தேவரகொண்டா படத்துக்கு சிக்கல்.. இதனால அந்த படத்தை புறக்கணிக்கிறோம்.. பாலிவுட் ரசிகர்கள் பளிச்! விஜய் தேவரகொண்டா படத்துக்கு சிக்கல்.. இதனால அந்த படத்தை புறக்கணிக்கிறோம்.. பாலிவுட் ரசிகர்கள் பளிச்!

    பிரமாண்டமாக வெளியான சோழா சோழா

    பிரமாண்டமாக வெளியான சோழா சோழா

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன், செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு நிகழ்ச்சி ஐதராபாத்தி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், கார்த்தி, விக்ரம், மணிரத்னம், சிரஞ்சீவி, ராஜமெளலி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ரசிகர்களிடம் கிடைத்த சிறப்பான வரவேற்பு

    ரசிகர்களிடம் கிடைத்த சிறப்பான வரவேற்பு

    ரஹ்மானின் இசையில் ஆதித்ய கரிகாலனான விக்ரமின் எழுச்சிப் பாடலாக உருவாகியுள்ள 'சோழா சோழா' ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. வெளியானது முதல் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் 'சோழா சோழா', இதுவரை தமிழில் மட்டும் 3 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. ரஹ்மான், மணிரத்னம் கூட்டணியில் 'சோழா சோழா' பாடல், மற்றுமொரு மாஸ் மேஜிக் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    பாகுபலி தான் இதுக்கு காரணம்

    பாகுபலி தான் இதுக்கு காரணம்

    'சோழா சோழா' படல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம், இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி தெரிவித்தார். "பாகுபலி திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் உருவாவதற்கு காராணமாக இருந்தது. அந்தப் படத்தின் மேக்கிங்கை பார்த்தப் பின்னர் தான், பொன்னியின் செல்வனை திரையில் கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கையை தந்தது." என நெகிழ்ச்சியாக பேசினார் மணிரத்னம்.

    சிரஞ்சீவிக்கு எதுக்கு நன்றி?

    சிரஞ்சீவிக்கு எதுக்கு நன்றி?

    அப்போது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் இயக்குநர் மணிரத்னம் நன்றி தெரிவித்தார். ஆனால், "ஏன் நன்றி சொன்னேன் என இப்போதைக்கு சொல்ல மாட்டேன்" எனவும் மணிரத்னம் கூறியது, பலரையும் யோசிக்க வைத்தது. இந்நிலையில், மணிரத்னம் நன்றி சொன்னது ஏன் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பொன்னியின் செல்வன் படத்தின் தெலுங்கு வெர்ஷனில், மிக முக்கியமான கேரக்டருக்கு சிரஞ்சீவி டப்பிங் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    English summary
    Chiranjeevi voice-over for Telugu version of Ponniyin Selvan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X