குடும்பத்துடன் தம்பியின் படத்தை கண்டு மகிழ்ந்த சிரஞ்சீவி!

சென்னை : நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் வக்கீல் சாப் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது

பிரபல ஹிந்தி திரைப்படமான பிங்க் ஏற்கனவே தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இப்போது தெலுங்கில் வக்கீல் சாப் பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.

இந்த நிலையில் தம்பி பவன் கல்யாணின் படத்தை காண சிரஞ்சீவி தன்னுடைய குடும்பத்தாருடன் திரையரங்கிற்கு வந்து படத்தை கண்டு மகிழ்ந்துள்ளார் .

வக்கீல் சாப்

வக்கீல் சாப்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யான் இருவரும் சகோதரர்கள் என்பது பலரும் அறிந்ததே. இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்திருக்க இப்பொழுது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் வக்கீல் சாப் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

சென்ற ஆண்டு வெளியாக இருந்து பின் கொரானா சூழல் காரணமாக தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருந்த இதன் ரிலீஸ் தேதி நேற்று ஏப்ரல் 9ஆம் தேதி ஆரவாரமாக வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் களைகட்டியுள்ளது.

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல்

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல்

ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏற்கனவே வெளியான கதை தான் என்றாலும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை அமைத்து இவற்றில் உள்ளார் இயக்குனர் வேணு ஸ்ரீராம். மேலும் இதில் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடித்திருக்க பாதிக்கப்பட்ட பெண்களாக நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிரஞ்சீவி குடும்பத்துடன்

சிரஞ்சீவி குடும்பத்துடன்

படம் வெளியானது முதலே ரசிகர்கள் கூட்டம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிய நடிகர் சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாணின் திரைப்படத்தை காண திரையரங்குக்கு நேரடியாக குடும்பத்துடன் சென்று கண்டு மகிழ்ந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X