திமுகவினரின் அதிருப்தியால் சிரஞ்சீவி கோபம்-பிரசாரத்தை ரத்து செய்தார்

By Sudha

Chiranjeevi
திருத்தணி: தமிழகத்தில் 2 நாட்கள் திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து விட்டார்.

பிரசாரம் செய்ய வந்த இடத்தில் திமுகவைப் பற்றிப் பேசாமல் காங்கிரஸ் கட்சி குறித்து மட்டுமே அவர் பேசிக் கொண்டிருந்ததால் திமுகவினர் கோஷமிட அதனால் அப்செட் ஆகி அவர் தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து விட்டார்.

தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வேலூர் , திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்‌தார். கே ஜி கெண்டிகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ராமனை ஆதரித்து பேசிய சிரஞ்சீவி, பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை குறித்தே பேசினார்.

இது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக குறித்து பேசுமாறு அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து க முதல்வராக கருணாநிதி வருவார் என்று சொல்லிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கி சென்றார்.

அவரை மறித்த பத்திரிகையாளர்கள் என்ன கிளம்பி விட்டீர்கள் என்று கேட்டபோது குலாம் நபி ஆசாத் அவசரமாக கூப்பிட்டிருப்பதாகவும், அதன் காரணமாக, தான் பிரசாரத்தை முடித்துவிட்டு கிளம்பு‌வதாக சொல்லியபடி போய் விட்டார்.

முன்னதாக ஆவடியில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர். தாமோதரனை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார் சிரஞ்சீவி.

முதலில் வணக்கம் என்று தமிழில் கூறிய அவர் பின்னர் தெலுங்குக்குத் தாவினார். அவர் பேசுகையில், நான் தமிழ்நாட்டில் பிறந்தவன் அல்ல. ஆனால் உங்கள் மனதில் பிறந்து வளர்ந்து இன்று “மெகா" ஸ்டார் ஆகி இருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம்.

ஆவடி பகுதியில் பெரும்பாலான தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கின்றனர். நீங்கள் அனைவரும் காங்கிரசுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும். தமிழக வாக்காளர்கள் மிகவும் தெளிவானவர்கள். உங்கள் தீர்ப்பால் தமிழகத்திலும், மத்தியிலும் மிகச் சிறப்பான ஆட்சியை தர முடியும்.

மத்தியில் சோனியாகாந்தி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி 87 வயதிலும் பீஷ்மரை போல் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.

இவர்களின் நல்லாட்சி தொடர, தமிழகத்தை வளர்ச்சி அடைந்த மாநில மாக்க தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார் சிரஞ்சீவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X