Chiranjeevi movie collection: பாக்ஸ் ஆபீஸில் வேட்டை.. நான்கு நாளில் பல கோடியை கடந்த சிரஞ்சீவி படம்!

சென்னை: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியான 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் வெளியான நான்கு நாட்களில் அதிரடியான வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த வசூலின் மூலம் சிரஞ்சீவி பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சிரஞ்சீவி, நயன்தாரா நடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் கடந்த 12ந் தேதி தியேட்டரில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பெரிய தொழிலதிபரின் மகளான நயன்தாரா அப்பாவின் எதிர்ப்பை மீறி, சிரஞ்சீவியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சில ஆண்டுகள் மகள் மீது கோபத்தில் இருந்த நயன்தாராவின் அப்பா, இருவரையும் மன்னித்து வீட்டிற்கு அழைத்து மாப்பிள்ளையை, தனது பிஸ்னஸ் கவனித்துக்கொள்ள சொல்கிறார். ஆனால், மாப்பிள்ளை சிரஞ்சீவி மீது வன்மத்தோடு இருக்கும் நயன்தாராவின் அப்பா, சிரஞ்சீவியை வேலைக்காரன் போல் நடத்துகிறார். மனைவிக்கான அனைத்தையும் பொருத்துக்கொண்ட சிரஞ்சீவி ஒரு கட்டத்தில் பொங்கி எழ குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிரஞ்சீவி , நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். பின் இருவரும் சேர்ந்தார்களா... இல்லையா என்பது தான் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படத்தின் கதை.

Chiranjeevi movie box office
Photo Credit:

'மன ஷங்கர வர பிரசாத் காரு': தியேட்டரில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் முதல் நாள் ₹84 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், படம் வெளியான நான்கு நாட்களில் இதுவரை, உலக அளவில் ₹200 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனரான அனில் ரவிபுடி, இந்த மாபெரும் வெற்றிக்கு ரசிகர்களின் ஆதரவே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

வசூலில் சாதனை: கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் 'சங்கராந்திக்கு வஸ்துன்னம்' என்கிற படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடிதான். அதுமட்டுமில்லாமல், பாலைய்யா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் இயக்குநரும் இவர் தான். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அசாத்திய நடிப்பும், புதுமையான கதைக்களமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூடில குவித்து வருகிறது. தெலுங்குத் திரையுலகில் சிரஞ்சீவியின் அசைக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் ஒருமுறை சிரஞ்சிவி உறுதிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X