திமுக கூட்டணிக்கு ஆதரவு-தமிழகத்தில் 2 நாட்களுக்கு சிரஞ்சீவி பிரசாரம்

தெலுங்கு சூப்பர்ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சிரஞ்சீவியை தமிழகத்தில் பிரசாரம் செய்யுமாறு சோனியா கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் சிரஞ்சீவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட சிரஞ்சீவி நாளை(8-ம் தேதி) முதல் 2 நாட்களுக்கு தமிழகத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். ஆனால் அவர் எந்த தொகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, நடிகர் சிரஞ்சீவி தமிழகத்தில் பிரசாரம் செய்வது உண்மை தான். ஆனால் அவர் எங்கெல்லாம் பிரசாரம் செய்கிறார் என்ற தகவல் இன்னும் எங்களுக்கு வரவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











