'சிறந்த இயக்குனர்களுடன்..' ஷங்கருடன் இணையும் ராம் சரண் தேஜா.. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகிழ்ச்சி!

By

சென்னை: இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் தேஜா அடுத்த படத்தில் இணைவதை அடுத்து அவருடைய தந்தையும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான சிரஞ்சீவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர், இப்போது 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார்.

கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து, 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடி வேணு, கவுண்டமணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகத்தில் சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஈவிபி பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் அதிகரித்தது.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

இதனால், ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்னும் தொடங்கப் படவில்லை. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ராம் சரண் தேஜா

ராம் சரண் தேஜா

இந்தப் படம், பான் இந்தியா படமாக உருவாகிறது என்றும் இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம், இந்தி மொழி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கன்னட ஹீரோ யஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு ஹீரோ, ராம் சரண் தேஜாவை இயக்க இருப்பதாக சில நாட்களாக செய்திகள் பரவியது.

தயாரிப்பாளர் தில் ராஜூ

தயாரிப்பாளர் தில் ராஜூ

இந்நிலையில் அது அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஶ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இது ராம்சரணுக்கு 15 வது படம். இதன் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை.

சிரஞ்சீவி மகிழ்ச்சி

சிரஞ்சீவி மகிழ்ச்சி

இதற்கிடையே, இந்த பட அறிவிப்பை அடுத்து தெலுங்கு ஹீரோவும் ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. ஆர்வமுள்ள சிறந்த இயக்குனர்களுடன் தொடர்ந்து சினிமாவில் பயணிப்பது சந்தோஷத்தை தருகிறது. வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X