கணவர் மீது சிரஞ்சீவி மகள் புகார்: மருமகன் கைது?

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா தனது காதல் கணவர் ஸ்ரீஷ் பரத்வாஜ் வரதட்சனைக் கேட்டு தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். கடந்த 6 மாதங்களாகவே ஸ்ரீஷ் பரத்வாஜும், அவரது பெற்றோரும் ஸ்ரீஜாவை அவரது தந்தையிடம் இருந்து மேலும் வரதட்சனை வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
பொறுமையை இழந்த ஸ்ரீஜா இறுதியில் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் நேற்று ஸ்ரீஷ் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத்தில் பேசப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீஜா கூறியதாவது,
ஏற்கனவே பல கோடி ரூபாய் வரதட்சனையாக கொடுத்துவிட்டோம். தற்போது இன்னும் ரூ. 1.5 கோடி கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











