Chitha Blue Sattai Review: "குழந்தைங்களோட பார்க்கணும்..” ‘சித்தா' ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம் நாளை (செப். 28) வெளியாகவுள்ளது.
அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த் உடன் நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படங்களுடன் 'சித்தா' வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கியுள்ள திரைப்படம் சித்தா. சித்தார்த்துடன் நிமிஷா சஜயன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நாளை வெளியாகவுள்ள சித்தா படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார். சித்தா குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ஹீரோவான சித்தார்த்தின் அண்ணன் உயிரிழந்துவிடுகிறார். அதனால், அண்ணனின் 8 வயது மகளை அண்ணியுடன் சேர்ந்து வளர்க்கும் பொறுப்பு சித்தார்த்துக்கு வருகிறது. அண்ணன் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் சித்தார்த்துக்கு ஒரு நண்பன். அவர்களுக்கும் 8 வயதில் ஒரு மகள் இருக்க, இந்த இரண்டு சிறுமிகளுமே ஒரே பள்ளியில் படிக்கிறார்களாம். அப்போது நண்பனின் மகளை யாரோ Child Abuse செய்துவிடுவதாகவும், அந்த பழி சித்தார்த்தின் மீது விழுவதாகவும் திரைக்கதை நகர்கிறதாம்.
இந்தச் சம்பவத்தில் உண்மை என்ன, சித்தார்த் இதிலிருந்து தப்பித்தாரா என்பது தான் மீதிக் கதை என்றுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதேநேரம், இதற்குப் பின்னால் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் இருப்பதாகவும், இது முழுக்க முழுக்க Child Abuse பற்றி பேசுவதாகவும் கூறியுள்ளார். இந்த கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால், இது கருத்து சொல்ற படமாக இருந்திருக்கும். ஆனால், இது அப்படியில்லாமல் மேம்போக்காக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நிறைய பிளாஷ்பேக் காட்சிகள் இல்லாமல் படத்தை அதன் போக்கிலேயே விட்டுள்ளது சிறப்பாக வந்துள்ளது. அதேபோல், குற்றவாளியை தண்டிக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, ஹீரோ எடுக்கும் முடிவை இன்னும் அழுத்தி சொல்லிருந்தால் சித்தா படம் வேற லெவலில் இருந்திருக்கும். அதேபோல், கொரிய மொழியில் வெளியான 'Hope' படத்தின் சாயலில் தான் 'சித்தா' உருவாகியிருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சித்தா படத்தில் நடிகர்கள் தேர்வு சரியாக செட்டாகியுள்ளது, அதேபோல், கதையும் போரடிக்காமல் நகர்கிறது. Child Abuse குறித்து நம்வீட்டு குழந்தைகள் புரிந்துகொள்வதற்காக 'சித்தா' படத்தை தியேட்டரில் கூட்டிச் சென்று பார்க்கலாம் எனவும் ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











