Chithha Public Review: "அழுகைய கன்ட்ரோல் பண்ண முடியல..” சித்தார்த்தின் சித்தா பட Public விமர்சனம்

சென்னை: சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Child Abuse எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், சித்தா பார்த்த ரசிகர்கள், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் படத்திற்கு விமர்சனம் கூறியுள்ளனர்.

 Chithha Public Review: Siddharth Starrer Chithha Film Public Review

சித்தா Public விமர்சனம்: பாய்ஸ் படத்தின் மூலம் சாக்லெட் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த், கடந்த 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஹீரோ, கெஸ்ட் ரோல், கேமியோ என பலவிதமான கேரக்டர்களில் நடித்துள்ளார் சித்தார்த். ஆனாலும், இதுவரை அவரது கேரியரில் பெஸ்ட் திரைப்படம் என எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த குறையை சித்தா திரைப்படம் சரி செய்துள்ளது.

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியானது. சித்தார்த்துடன் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படங்களுக்குப் போட்டியாக வெளியான சித்தா, ரசிகர்களிடம் நல்ல எமோஷனலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சித்தார்த்தின் அண்ணன் உயிரிழந்துவிட, அவரது 8 வயது மகளை அண்ணியுடன் சேர்ந்து வளர்த்து வருகிறார். சித்தார்த்தின் நண்பனுக்கும் 8 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில், ஒருநாள் நண்பனின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக, அந்த பழி சித்தார்த்தின் மீது விழுகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மை என்ன, சித்தார்த் இதிலிருந்து தப்பித்தாரா என்பது தான் சித்தா படத்தின் கதை.

இந்த கதையில் Child Abuse பற்றிய இன்னொரு முக்கியமான சம்பவத்தையும் ரசிகர்களுக்கு புரிய வைத்துள்ளார் இயக்குநர். சித்தார்த்தின் எமோஷனலான நடிப்பு, சமூகத்திற்கு சொல்ல வந்த மெசேஜ் என எல்லாவிதத்திலும் சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், கண்ணீர் மல்க விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சமூகத்தில் அதிகமாக நடந்துவரும் Child Abuse பற்றி பக்குவமாக விவரிக்கிறது இந்தப் படம். ஆபாசம் இல்லாமல் Child Abuse குறித்து மக்களுக்கு புரியும்படி பேசியுள்ளது. குட் டச், பேட் டச் பற்றி பெண் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு சித்தா திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம் என கூறியுள்ளனர். சமூகத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினையை சித்தா படம் பேசியுள்ளதாகவும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும், இரண்டாம் பாதி முழுவதும் ரொம்பவே எமோஷனலாக இருப்பதாகவும், படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். சித்தா படத்தின் விமர்சனம் கூறிய ரசிகர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய படி கருத்துத் தெரிவித்தது, படக்குழுவினரை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X