டாப் ஹீரோவுடன் நடிக்கும் சித்தி 2 நடிகை.. கலக்கலான போட்டோவுடன் மகிழ்ச்சிப்பதிவு!

சென்னை : சன் டிவியின் பிரபல சீரியலாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த தொடர் சித்தி 2.

சித்தி சீரியல் ராதிகாவிற்கு கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த தொடர் வெளியானது.

இந்தத் தொடரில் தனது சிறப்பான நடிப்பை வழங்கி அனைவரையும் கவர்ந்தார் நடிகை பிரீத்தி ஷர்மா.

சித்தி 2 சீரியல்

சித்தி 2 சீரியல்

சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சன் டிவியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஒளிபரப்பானது சித்தி 2 சீரியல். முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சித்தி சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த சீரியலின் தாக்கம் தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்பட்டது.

மிகச்சிறந்த வரவேற்பு

மிகச்சிறந்த வரவேற்பு

இதனிடையே அந்த சீரியலின் இரண்டாம் பாகமாக வெளியான சித்தி 2 சீரியலும் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. முந்தைய பாகத்திலும் ராதிகாவின் கேரக்டர் சாரதா என்று இருந்த நிலையில், இந்த இரண்டாவது பாகத்திலும் அவரது கேரக்டரின் பெயர் சாரதாவாகவே இருந்தது.

சீரியலில் இருந்து விலகிய ராதிகா

சீரியலில் இருந்து விலகிய ராதிகா

இதனிடையே மிகவும் சிறப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து விலகினார் நடிகை ராதிகா. இதனால் இந்த சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெறத்தவறியது. ஆனாலும் மற்ற நடிகர், நடிகைகளை வைத்து இந்த சீரியல் ஓடியது. ஹீரோ கவினை இரண்டு வேடங்களில் காட்டியது.

நிறைவுபெற்ற சித்தி 2 சீரியல்

நிறைவுபெற்ற சித்தி 2 சீரியல்

இதுபோன்ற பல சுவாரஸ்யங்களை இந்த சீரியல் கொண்டிருந்தாலும், ராதிகா இல்லாத சித்தி 2 சீரியலை ரசிகர்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்குகள் காட்டின. இதையடுத்து இந்தத் தொடர் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த பிரீத்தி ஷர்மா

ரசிகர்களை கவர்ந்த பிரீத்தி ஷர்மா

இந்தத் தொடரின்மூலம் அறிமுகமாகி தன்னுடைய க்யூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் பிரீத்தி ஷர்மா. இந்தத் தொடர்மூலம் சமூக வலைதளங்களிலும் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மகேஷ்பாபுவுடன் புதிய படத்தில் பிரீத்தி

மகேஷ்பாபுவுடன் புதிய படத்தில் பிரீத்தி

இந்தப் படத்தில் பிரபல தெலுங்குப்பட ஹீரோ மகேஷ்பாபுவுடன் காணப்படுகிறார் பிரீத்தி ஷர்மா. மேலும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். சின்னத்திரை மூலம் பிரபலமாகும் நடிகர்கள் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுவரும் நிலையில், அந்த பட்டியலில் இணைந்துள்ளார் ப்ரீத்தி ஷர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X