சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடியான சித்ரா மற்றும் குமரனுக்கு மயிலாடுதுறையில் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பிரபல விஜேவும் நடிகையுமான சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது காதல் கணவருடன் தங்கியிருந்த போது இந்த சோக முடிவை எடுத்தார் சித்ரா.

தற்கொலைக்கு காரணம்
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கணவர் ஹேமந்த் தனது நடத்தையில் சந்தேகப்பட்டது போன்ற காரணங்களால் சித்ரா இந்த முடிவை எடுத்தார். போலீஸ் விசாரணையிலும் சித்ராவின் தற்கொலைக்கு காரணம், கணவர் ஹேமந்த்தான் என்று தெரிய வந்தது.

நாள்தோறும் அதிர்ச்சி தகவல்
தற்போது ஹேமந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் தோழிகளும் ஹேமந்தின் நண்பர்களும் ஹேமந்த் சித்ராவை படுத்திய பாட்டை தோலுரித்து வருகின்றனர். இதனால் நாள்தோறும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.

தங்கள் வீட்டு மருமகள்
அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்தார் சித்ரா. இந்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். முல்லை கதாப்பாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் முல்லையை தங்களின் வீட்டு மருமகளாகவே பார்ப்பதாக சித்ரா பல நேர்க்காணல்களில் கூறியிருக்கிறார்.

முதலிரவு காட்சிதான்
அதேபோல் சித்ராவுக்கும் அவரது சீரியல் ஜோடியான குமரனுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருவரும் கணவன் மனைவியாக நடித்தனர். அதில் இடம்பெற்ற முதலிரவு காட்சிதான் சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் இடையில் பிரச்சனை வரவும் காரணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

அடித்து துன்புறுத்திய ஹேமந்த்
அந்தக் காட்சிக்கு பிறகுதான் சித்ரா மீதான சந்தேகம் ஹேமந்துக்கு அதிகமானது என்றும் இதனால் சித்ராவை ஹேமந்த் அடித்து துன்புறுத்தினார் என்றும் ஹேமந்தின் நண்பரான ரோஹித் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சித்ரா குமரனுக்கு பேனர்
இந்நிலையில் சித்ராவுக்கும் அவரது சீரியல் பார்ட்னரான குமரனுக்கும் வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேனர் மயிலாடுதுறையில் உள்ள அண்ணாச்சி டீ, காபி, சென்டர் அன்ட் ஜூஸ் சென்டரில் வைக்கப்பட்டுள்ளது.

எமனாக வந்துவிட்டதே..
இதில் சித்ரா மற்றும் குமரனின் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த கேரக்டரே உனக்கு எமனாக வந்துவிட்டதே என்றும் அவசரப்பட்டிருக்கக் கூடாது என்றும் கூறி வருகின்றனர். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











