ரெசார்ட்டில் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி சித்ராவை மிரட்டிய பிரபல நடிகர்? வெளியான பகீர் தகவல்!
சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பகீர் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த சித்ராவின் மரணம் ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை கலைஞர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஸ்டார் ஹோட்டலில் தற்கொலை
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தனது காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார் சித்ரா. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தனது கணவருடன் சென்னையை அடுத்த நசரத்பேட்டை ஹோட்டலில் தங்கியிருந்த போது சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

பல்வேறு சந்தேகங்கள்
சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது முகத்தில் நகக்கீறல்களும் காயங்களும் இருந்தன. இதனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கழுத்தில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.

பிரேத பரசோதனை அறிக்கை
சித்ராவின் தாயாரும் சித்ராவை அவரது கணவரான ஹேமந்துதான் அடித்து கொலை செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார். ஆனால் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று என்று தெரிவித்தது.

ஆபாசமாக திட்டிய ஹேமந்த்
இந்நிலையில் ஹேமந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் சித்ரா சக நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது பிடிக்காமல் சண்டையிட்டது தெரிய வந்தது. சித்ராவை ஆபாசமாக பேசி செத்துத் தொலை என்று ஹேமந்த் கூறியதால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கம்பி எண்ணும் ஹேமந்த்
இதனை தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த திங்கள் கிழமை இரவு அவரது கணவரான ஹேமந்த் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹேமந்த்.

சித்ராவின் தோழி பகீர்
இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய தோழி கங்கா பாணி என்பவர் அளித்துள்ள பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது சித்ராவுக்கு டேட்டிங் செல்லும் பழக்கம் இருந்ததாகவும் யாருடன் டேட்டிங் சென்றாலும் சித்ரா என்னிடம் சொல்லுவார் என்று கூறியுள்ளார்.

நடிகருடன் காதல்
மேலும் சித்ராவின் மரணம் சத்தியமாக கொலை தான் என்றும் கூறியுள்ளார் அந்த தோழி. இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் நடிகர் ஒருவர்தான் என்றும் சித்ராவும் அந்த நடிகரும் காதலித்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

நெருக்கமாக இருந்த வீடியோ
அந்த நடிகருடன் சித்ரா ஒருமுறை டேட்டிங் சென்ற போது ரெசார்ட்டில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது அந்த நடிகர் அதை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சித்ராவை மிரட்டியதகாவும் தெரிவித்துள்ளார்.

சித்ராவுக்கு சந்தேகம்
சித்ராவுக்கு திருமணம் ஆன பிறகும் அந்த வீடியோவை காட்டி தொல்லை செய்ததாகவும், நான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனால் அந்த பிரபல நடிகர், ஹேமந்திடம் அந்த வீடியோவை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

நடிகர் பேசினால் மட்டுமே..
சித்ராவின் தோழி அளித்துள்ள இந்த பேட்டியால் சித்ராவின் மரணத்தில் மேலும் பல மர்மங்கள் இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அந்த பிரபல நடிகர் வாயை திறந்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.

சினிமா நடிகர்
அந்த நடிகர் பிரபல தொலைக்காட்சியில் சித்ராவுடன் பணியாற்றியவர் என்றும், விஜேவாக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நடித்த முதல் படமே பெரும் வெற்றி பெற்றது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











