எமனாய் வந்து.. என் பொண்ண அடிச்சு சாவடிச்சுட்டாங்க.. சித்ராவின் உடலை பார்த்து கதறிய தாயார்!
சென்னை: தனது மகளை அவரது கணவரான ஹேம்நாத்துதான் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது தயார் கதறியுள்ளார்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது காதலரான தொழிலதிபர் ஹேம்நாத்தை பெற்றோர் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தார் சித்ரா.

தூக்கிட்டு தற்கொலை
அடுத்த மாதம் விமர்சையாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா.

முகத்தில் காயங்கள்
தனது கணவரான ஹேம்நாத் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருந்த போதும் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

என் பொண்ணு கோழையில்லை
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் இன்று கூராய்வு செய்யப்பட்டு அவரது சகோதரர் சரவணனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்த அவரது தாயார் விஜயா கதறி அழுதார். என் பொண்ணு கோழை இல்லை. அவர் தைரியமான பொண்ணு.

அடித்து கொன்றுவிட்டான்
அவரை தைரியமனாவராகதான் வளர்த்தேன். அவரை அடித்து கொன்றுவிட்டான். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் மகள் கோழை அல்ல. நானே அவனை கொன்னுடுவேன்.

எமனாய் வந்துட்டான்
தனியா கார் ஓட்டிட்டு போவார் வருவார்.. எதற்கும் பயப்பட மாட்டார் என் மகள். என் பொண்ணுக்கு எமனாய் வந்துட்டாங்க. ஒன்றாம் தேதிதான் அவங்க வீட்டுக்கு போனார். பதிவு திருமணம் ஆகிவிட்டதே எங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் இருக்கட்டும் என்று அவரின் அப்பாதான் அழைத்தார்.

சும்மா விடக்கூடாது..
இப்படி பண்ணிட்டாங்களே. ரவுடியா இருப்பாங்க போல.. குடும்பமே ரவுடி குடும்பம் போல.. எனக்கு தெரியாமல் போய் விட்டதே. முல்லை ஃபேன்ஸ் அவர் சாவுக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது.

மோசம் பண்ணிட்டான்னு சொல்றாங்க
செவ்வாய்க்கிழமை இரவு போனில் பேசினார். ஸ்டார்ட் மியூஸிக்கில் இருப்பதாக கூறினார். புதன் கிழமை காலையில் ஹேம்நாத்தின் தந்தை சித்ரா நம்மள மோசம் பண்ணிட்டு போயிட்டா என்றார். எப்படி அவர் மோசம் பண்ணுவார். நான் அப்படி வளர்க்கலையே.

பிப்ரவரியில் திருமணம்
திங்கள் கிழமைதான் மண்டபத்தை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தோம். ஹேம்நாத் குடும்பத்தாரும் வந்தார்கள். பிப்ரவரி 10ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். பதிவு திருமணம் முடிந்ததால் ஹேம்நாத்தின் அப்பா, அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

மதுப்பழக்கம் இருப்பது தெரியாது
ஹேம்நாத்துக்கு மதுப்பழக்கம் இருப்பது தெரியாது. சித்ராவின் புகழுக்காகவும் பணத்துக்காகவும் அவரை கல்யாணம் பண்ணி, அடித்தே கொன்றுவிட்டார்கள். என் மகளின் சாவுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கதறியுள்ளார் சித்ராவின் தாய் விஜயா.


Click it and Unblock the Notifications