ஹேம்நாத் குடும்பத்திற்கு நடிப்பு பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்த இருந்த சித்ரா.தாய் பகீர் தகவல்!

சென்னை: நடிகை சித்ரா தனது திருமணத்தை நிறுத்தும் முடிவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நசரத் பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை சித்ரா தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார்.

ஹேம்நாத்திடம் விசாரணை

ஹேம்நாத்திடம் விசாரணை

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் நேற்றிரவு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார் சித்ரா. இந்நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போதலீசார் , உடன் இருந்த ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினர்.

முகத்தில் காயம் நகக்கீரல்கள்

முகத்தில் காயம் நகக்கீரல்கள்

அதில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்டோபர் 19ஆம் தேதி தனக்கும் சித்ராவுக்கும் பதிவு திருமணம் நடந்ததாக கூறினார் ஹேம்நாத். மேலும் சித்ராவின் முகத்தில் நகக்கீரல்களும் காயங்களும் உள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

இதனால் அவரது கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், சித்ராவின் செல்போனையும் கைப்பற்றி தொலைப்பேசி உரையாடல்கள், மெஸேஜ்களை ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணத்தை நிறுத்தும் முடிவு

திருமணத்தை நிறுத்தும் முடிவு

இதனிடையே சித்திராவின் நெருங்கிய நண்பர்கள் சில பகீர் தகவல்களை கூறியுள்ளனர். அதாவது சித்ரா நிச்சயதார்த்ததுடன் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருந்தார். சீரியலில் நடித்த சில காட்சிகளுக்கு ஹேம்நாத் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.

ஹோட்டல் அறையில் மரணம்

ஹோட்டல் அறையில் மரணம்

மேலும் திருமண தேதி குறித்ததிலும் சித்ரா தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளனர். நேற்றிரவு திருமணம் தொடர்பாக பற்றி பேச ஹேமநாத் குடும்பத்தினர் பூந்தமல்லி ஹோட்டலுக்கு வந்து இருந்தாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில்தான் சித்ராவின் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

உண்மை வெளியே வரும்

உண்மை வெளியே வரும்

சித்ரா தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை அல்ல என்றும் அவரது முகத்தில் காயங்கள் இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் சித்ரா மரணம் குறித்து போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளி வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மரணத்தில் சந்தேகம்

மரணத்தில் சந்தேகம்

இதனிடையே சித்ராவின் மரணம் குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் தைரியமானவர். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் கூறி கதறியுள்ளார். நடிகை சித்ரா கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்ததால் அவரது தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X