Just In
- 13 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 19 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 2 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
Don't Miss!
- Sports
இந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்.. இந்த மேட்ச்சும் போச்சு.. கதிகலங்கிய ஆஸி.!
- News
தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. அங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சித்ராவுக்கு குடி பழக்கம் இருந்தது.. முன்னாள் காதலர்கள் மிரட்டியிருக்கலாம்.. மாமனார் பகீர்!
சென்னை: நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது முன்னாள் காதலர்களின் மிரட்டல்கள் காரணமாக இருந்திருக்கலாம் என அவரது மாமனார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகையான சித்ரா மரணமடைந்த 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
ஒன்னு கூடிட்டாங்க.. என்ன பிளான் பாஸூ? வைரலாகும் ரகுமான், ஷங்கர், விக்ரம் மகன்கள் போட்டோஸ்!
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹேமந்தின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சித்ராவின் தாய் கேள்வி
மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிwhர். சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சித்ராவின் தாயார் குற்றம்சாட்டி வருகிறார். தங்களிடம் தெரிவிக்காமல் சித்ராவை ஹேமந்த் ஹோட்டலுக்கு அழைத்து சென்றது ஏன் என்றும் கேட்டு வருகிறார்.

ஹேமந்த் நண்பர்கள்
மேலும் சித்ராவின் மரணம் தற்கொலை அல்ல கொலைதான் என்று கூறி வரும் சித்ராவின் தாயார் விஜயா, இதில் ஹேமந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்.

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சித்ரா மரணம் தொடர்பாக அண்மையில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பாக கடந்த 7ஆம் தேதி இரு குடும்பத்தினரும் திருமண மண்டபத்திற்கு சென்று அட்வான்ஸ் கொடுத்து வந்த சிசிடிவி காட்சிகளை வெளிட்டார்.

முன்னாள் காதலர்கள்
இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது புகாரில் சித்ரா குறித்து தெரிவித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த புகாரில் ஹேமந்தின் தந்தை, சித்ரா தற்கொலை செய்து கொள்ள அவரது முன்னாள் காதலர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான விஐபிகள் மற்றும் தொழிலதிபர்கள் கொடுத்த மிரட்டல் காரணமாக இருக்கலாம் என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

மூன்று பேரை காதலித்துள்ளார்
மேலும் சித்ரா ஏற்கனவே மூன்று பேரை காதலித்துள்ளார். அதில் ஒரு சில காதல் திருமணம் வரை சென்று நின்று விட்டதாகவும் கூறியிருக்கிறார் ரவிச்சந்திரன். சித்ராவுக்கு குடிப்பழக்கம் இருந்தது என்றும், தொகுப்பாளர் ஒருவருடன் சித்ரா டேட்டிங் சென்றதாகவும் கூறியுள்ளார்.

தனியாக போய்தான் பேசுவார்
சித்ராவுக்கு ஒரு சில நம்பர்களில் இருந்து அழைப்பு வரும் என்றும், அப்படி வரும்போது அவர் தனியாக போய்தான் பேசுவார். பேசி முடித்ததும் அந்த நம்பர்களை தனது போனில் இருந்து டெலிட் செய்து விடுவார் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ரவிச்சந்திரன்.

ஆதாரங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்த..
சித்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், அவருடன் நெருக்கமாக இருந்த சிலர் ஆதாரங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்த போவதாக மிரட்டி இருக்கலாம். அதன் காரணமாக சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

பின்னணியில் தொழில் அதிபர்கள்
சித்ரா ஆடி கார் வாங்கியது, திருவான்மியூரில் கோடிக்கணக்கில் வீடு வாங்கியதற்கு பின்னணியில் சில அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் இருக்கிறார்கள் என்றும் அவரது மாமனார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.