நடிகை சித்ரா சொகுசு பங்களா.. ஆடி கார் வாங்கியது எப்படி? பகீர் கிளப்பும் தோழி!

சென்னை: நடிகை சித்ரா சொகுசு வீடுகள் மற்றும் ஆடி கார் ஆகியவை எப்படி கிடைத்தன என்று அவரது தோழி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

RDO விசாரணையில் கலந்துக்கொண்ட Chithraவின் தோழி Sharanya Turadi

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா கடந்த அக்டோபர் மாதம் தான் தனது காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார். வரும் பிப்ரவரி மாதம் விமர்சையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.

திருமண மண்டபம்

திருமண மண்டபம்

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடந்த 7ஆம் தேதி சித்ரா தனது அப்பா, அம்மா, மாமனார், மாமியார் மற்றும் கணவருடன் சென்று திருமண மண்டபத்தை பார்த்து அட்வான்ஸ் தொகை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியானது.

தாயார் குற்றச்சாட்டு

தாயார் குற்றச்சாட்டு

சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் குற்றம்சாட்டி வருகின்றார்.

மார்பிலும் காயங்கள்

மார்பிலும் காயங்கள்

சம்பவத்தன்று ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் இடையில் தகராறு நடந்திருக்கலாம் என்றும் அதில் ஹேமந்த் சித்ராவை அடித்து கொன்றிருக்கலாம் என்றும் கூறி வருகிறார். சித்ராவின் முகத்தில் மட்டுமில்லாமல் மார்பிலும் காயங்கள் இருந்ததாக குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

முன்னால் காதலர்கள் மிரட்டல்

முன்னால் காதலர்கள் மிரட்டல்

ஆனால் இதனை மறுத்துள்ள ஹேமந்தின் தந்தை, சித்ரா இதற்கு முன்பு 3 பேரை காதலித்துள்ளார். அவர்களுடன் டேட்டிங் சென்றுள்ளார். சித்ராவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர்கள், ஆதாரங்களை காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

குண்டைப் போட்ட மாமனார்

குண்டைப் போட்ட மாமனார்

இதனால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று கமிஷனர் அலுவலகத்தில் பகீர் புகாரை ஒன்றை அளித்தார். மேலும் ஆடி கார் மற்றும் திருவான்மியூரில் சொகுசு வீடு ஆகியவை சித்ராவுக்கு தொழிலதிபர்கள் மற்றும் விஐபிக்களால் கிடைத்தது என்றும் குண்டை தூக்கிப் போட்டார்.

சொகுசு பங்களா ஆடி கார்

சொகுசு பங்களா ஆடி கார்

இந்நிலையில் நடிகை சித்ராவின் தோழியான கங்கா பாணி அவர் குறித்த சில திடுக் தகவல்களை கூறியுள்ளார். அதாவது சித்ரா மீது விஐபியின் மகன் ஒருவருக்கு கண் இருந்தது. சித்ரா திடீரென ஆடி கார் மற்றும் திருவான்மியூரில் சொகுசு பங்களா எல்லாமே அவர்களின் செல்வாக்கால் வாங்கியதுதான் என்று கூறியுள்ளார்.

விசாரணை நடத்த திட்டம்

விசாரணை நடத்த திட்டம்

சித்ராவின் தாய் விஜயா, இந்த தகவல்களை மறுத்துள்ள நிலையில் சித்ராவின் மாமனார் மற்றும் தோழி கூறியுள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சித்ராவின் தோழிகளிடம் அவரது மரணம் குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X