twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் கணவருக்கு ஜாமின்.. பணமோசடி வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு!

    |

    சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

    சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளருமான சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

    தனது காதல் கணவருடன் தங்கியிருந்த போதே சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த்

    சிறையில் அடைக்கப்பட்ட ஹேமந்த்

    ஹேமந்த் சித்ராவின் நடத்தையில் கொண்ட சந்தேகமும் இதனால் ஏற்பட்ட சண்டையுமே சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹேமந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பண மோசடி வழக்கு

    பண மோசடி வழக்கு

    இதுதொடர்பாக ஜாமின் கோரி ஹேமந்த் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அண்மையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால் பண மோசடி வழக்கில் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    மனோகரன் புகார்

    மனோகரன் புகார்

    மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக ஹேமந்துக்கு எதிராக சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரை சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

    ரூ. 1 கோடி 5 லட்சம்

    ரூ. 1 கோடி 5 லட்சம்

    அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்திருந்த தனது மகள் மாளவிகா மற்றும் அவரது தோழிகள் இருவர் என மூவருக்கும் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதற்கு ஹேமந்தை அணுகிய நிலையில் ஒரு சீட்'க்கு 35 லட்சம் என்ற அடிப்படையில் 1 கோடியே 5 லட்ச ரூபாய் ஹேமந்துக்கு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    ஆனால் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்ட போது, ஹேமந்த் 10 லட்ச ரூபாய் மட்டும் ரொக்கம் கொடுத்துவிட்டு வங்கிக்கணக்கில் பணமில்லாத காசோலைகளை கொடுத்து ஏமாற்றியதாகவும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    நிபந்தனை ஜாமின்

    நிபந்தனை ஜாமின்

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹேமந்த் மனுத்தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறையிலிருந்து வெளிவந்த 3 வாரத்திற்குள் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஹேமந்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    Chithra's husband Hemanth gets condition bail in Money laundering case. Chithra commit suicide on December 9th where she was staying with her husband.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X