சித்ரா கடைசியாக பேசிய வசனம்.. மாயவரம்.. பல்லாவரம்.. தாம்பரம்.. வாய்ல நல்லா வரும்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: ஸ்ட்ராட் மியூஸிக் நிகழ்ச்சியில் விஜே சித்து கடைசியாக பேசிய பஞ்ச் டயலாக் வைரலாகி வருகிறது.
பிரபல சின்னத்திரை நடிகையும் விஜேவுமான சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரது மரணம் தற்கொலைதான் என்பதை உறுதி செய்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் சித்ராவின் மரணம் தற்கொலை என ஒத்துக்கொள்ளவில்லை.

ஹேமந்த் கைது
சித்ராவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு மாற்றம்
சித்ராவின் மரண வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு அண்மையில் மாற்றப்பட்டது. இதன் மூலம் சித்ராவின் மரணத்தில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்கொலைக்கு முதல் நாள்
இதனிடையே நடிகை சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது சித்ரா இறப்பதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சொப்பன சுந்தரிஸ்
அன்றைய நாள் எடுக்கப்பட்ட முதல் எபிசோட் ஏற்கனவே ஒளிபரப்பான நிலையில், அவர் பங்கேற்ற மற்றொரு எபிசோடின் ப்ரோமோக்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி கூருஐ இதில் சொப்பன சுந்தரிஸ், ஜிகிடி கில்லாடிஸ் என்ற இரு அணிகளாக சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

தனக்கு தானே தோனி
இதில் ஏற்கனவே தனக்கு தானே தோனி என பெயர் வைத்துக் கொண்டதாக கூறி கலகலக்க வைத்த புரமோ வெளியானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புரமோ வெளியாகியுள்ளது.

வாய்ல நல்லா வரும்
அதில் மணிமேகலை சிவாங்கி உள்ளிட்டோர் உள்ள ஜிகிடி கில்லாடிஸ் அணி தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த சித்ரா மாயவரம்.. பல்லாவரம்.. தாம்பரம்.. இதுக்கு மேல ரெண்டு பேரும் ஏதாவது பேசுனா வாய்ல நல்லா வரும்.. என பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

கடைசி ஷுட்
இதனை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் சித்ராவின் கடைசி ஷூட் என கலங்கி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், என்ன சித்ரா அக்கா அவசரம் இவ்ளோ சீக்கிரம் போய்ட்டீங்களே என்றும் கேட்டு உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











