நீ இல்லாம என்னால் இருக்க முடியாது.. கடைசி சண்டையில் கதறிய சித்ரா.. வெளியான திடுக் தகவல்!

சென்னை: கடைசியாக நடந்த சண்டையின் போது நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என சித்ரா தனது கணவர் ஹேமந்திடம் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல விஜேவும் சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த 9ஆம் தேதி அதிகாலை நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Recommended Video

சென்னை: நடத்தையில் சந்தேகம் செத்துப்போ... சித்ரா வழக்கில் ஹேம்நாத் கைது!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார் சித்ரா. வரும் பிப்ரவரி மாதம் பிரபலங்களை அழைத்து இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஸ்டார்ட் மியூஸிக்

ஸ்டார்ட் மியூஸிக்

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சித்ரா. தொடர்ந்து நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியுள்ளார் சித்ரா.

ஹேமந்த் கோபம்

ஹேமந்த் கோபம்

ஏற்கனவே சித்ரா சீரியலில் சில காட்சிகளில் சக நடிகர்களுடன நெருக்கமாக நடிப்பது அவரது கணவர் ஹேமந்துக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பல முறை ஹேமந்த் சித்ராவிடம் நடிக்கக்கூடாது என சண்டை போட்டு வந்துள்ளார்.

ஷுட்டிங் ஸ்பாட்டில் சண்டை

ஷுட்டிங் ஸ்பாட்டில் சண்டை

மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்று சித்ராவிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த புதன்கிழமை அதிகாலை ஷூட்டிங் முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்த சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

இதன் முடிவில் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே அவரது மரணம் தற்கொலைதான் என தெரியவந்தது.

நகக் கீறல்கள்

நகக் கீறல்கள்

பெரும் சந்தேகங்களை எழுப்பிய அவருடைய முகத்தில் இருந்த நகக்கீறல்கள், அவருடையது தான் என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சித்ரா மரணமடைந்த 6 நாட்கள் ஆன நிலையில், அவரது கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

நேற்றிரவு கைது

நேற்றிரவு கைது

vஅடிதல் அதிகாலையில் சித்ராவுடன் தான் சண்டை போட்டதையும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரில் அழைத்து வந்த

காரில் அழைத்து வந்த

இந்நிலையில் போலீஸ் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ஹேமந்த். கடந்த புதன் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து சித்ராவை காரில் அழைத்து வந்துள்ளார் ஹேமந்த்.

ஹோட்டல் அறையில்

ஹோட்டல் அறையில்

காரிலேயே சீரியலில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகருடன் சேர்த்து வைத்து சந்தேகத்துடன் பேசியுள்ளார். காரில் தொடங்கிய இந்த வாக்குவாதம் ஹோட்டல் அறையிலும் தொடர்ந்துள்ளது.

உங்களை சாந்திருக்கிறேன்

உங்களை சாந்திருக்கிறேன்

வாக்குவாதம் முற்ற சந்தேகத்தின் உச்சத்தில் கடுமையாக சித்ராவை வசைபாடிய ஹேமந்த், யாருடன் ஆட்டம் போட்டாய் என்று கேட்டு ஆபாசமாக பேசியிருக்கிறார். தன் மீது சந்தேகப்படும் கணவரிடம், நான் உங்களைதான் சார்ந்திருக்கிறேன்.

செத்துத்தொலை..

செத்துத்தொலை..

நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கெஞ்சியுள்ளார் சித்ரா. அதற்கு இருக்க முடியாது என்றால் செத்துத் தொலை என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுள்ளார் ஹேமந்த்.

இறுதி முடிவு

இறுதி முடிவு

காதல் கணவருக்கு தன் மீது ஏற்பட்ட வெறுப்பு மற்றும் சந்தேகத்தால் விரக்தியடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனிடையே சித்ராவின் மாமனார் மற்றும் மாமியாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X