மகள்கள் விஷயம்.. ரஜினி இனி அந்த தவறை செய்யவே மாட்டார்.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களே. இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ட்ரோல்களையும், விமர்சனத்தையும் பெற்றன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி வசம் இருந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி அவரிடமிருந்து சென்றுவிடுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

Chitra Lakshamanan Open Talks about Rajinikanth And His Daughters

தட்டி தூக்கிய ஜெயிலர்: ஆனால் அந்த சீன்லாம் இல்லை என்று ஜெயிலர் படம் உணர்த்தியது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினிக்கு ஏற்றபடி சீன்கள், திரைக்கதை என ஒவ்வொரு விஷயத்தையும் நெல்சன் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். இதன் காரணமாக படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஜெயிலரில் பிடித்ததை இதில் விட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர். இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அடுத்ததாக கூலி படத்தில் நடிக்கிறார்.

Chitra Lakshamanan Open Talks about Rajinikanth And His Daughters

மகள்கள்: இதற்கிடையே ரஜினிகாந்த்துக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே இயக்குநர்கள்தான். ஆனால் இதுவரை ஐஸ்வர்யா இயக்கிய 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களும், இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களும் படுதோல்வியை மட்டுமே சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் இரண்டு பேரும் ஒரு பெரிய வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பையும் வீணடித்துவிட்டார்கள்.

சித்ரா லட்சுமணன்: இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்ட சித்ரா லட்சுமணன் இதுகுறித்து பேசுகையில், "சௌந்தர்யா கோச்சடையான் என்ற தோல்வி படத்தையே ரஜினிக்கு கொடுத்தார். ஐஸ்வர்யாவுக்கு வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியடைந்தன. அது நல்ல பாடத்தை அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே தவறை தனது அப்பாவை வைத்து லால் சலாம் படத்தில் செய்தார். ரஜினியை கேமியோ ரோலில் நடிக்க வைத்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே ரஜினிகாந்த் இனி தனது மகள்கள் இயக்கும் படத்தில் கண்டிப்பாக நடிக்கமாட்டார். அந்தத் தவறை செய்யமாட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X