விடாமுயற்சி தாமதத்துக்கு இதுதான் காரணம்.. சித்ரா லட்சுமணன் சொன்ன சீக்ரெட்
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். கடந்த வருடம் படத்தின் ஷூட்டிங் தொடங்கினாலும் ரொம்பவே தாமதமாக நடந்தது. இதனால் படம் ட்ராப்பாகிவிட்டதோ என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது பின்னர் உறுதியானது. மேலும் டீசரும் வெளியானது. அந்த டீசர் கலவையான விமர்சனத்தை பெற்றது. சூழல் இப்படி இருக்க பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்த அந்தப் படம் திடீரென தள்ளிப்போயிருப்பது ஏகே ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது.
அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசை வாரி சுருட்டியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வாரிசு படத்தைவிடவும் ஒருபடி மேலேதான் துணிவு இருந்ததாக பலரும் கூறினார்கள். அந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதால் மகிழ் திருமேனி லைகா தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்குவதற்கு கமிட்டானார்.

விடாமுயற்சி: அதன்படி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் என பலர் கமிட்டானார்கள். முதலில் நீரவ் ஷா சில நாட்கள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் கமிட்டானார். அதுமட்டுமின்றி ஆர்ட் டைரக்டர் மிலனும் உயிரிழந்தார். இப்படி பல காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ரொம்பவே தள்ளிப்போனது.
படத்தின் அப்டேட்: ஒருகட்டத்தில் விடாமுயற்சி படத்தை விட்டுவிட்டார்களோ என்றெல்லாம் ரசிகர்கள் பேசினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. டீசரில் எந்தவிதமான வசனமும் இல்லையென்றாலும் மகிழ் திருமேனியின் மேக்கிங், அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், படத்தின் லொக்கேஷன்கள், அனிருத்தின் இசை ஆகியவை அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் பொதுவான ரசிகர்களிடம் டீசருக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.
சிக்கலில் படக்குழு: அதேசமயம் படம் இன்னொரு சிக்கலிலும் மாட்டியிருக்கிறது. அதாவது இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. மேலும் பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஒரு தகவல் வட்டமடித்தது. சூழல் இப்படி இருக்க பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்த அந்தத் திரைப்படம் திடீரென தள்ளிப்போயிருக்கிறது.
சித்ரா லட்சுமணன் ஓபன் டாக்: இந்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் சித்ரா லட்சுமணன், "விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் தழுவல்தான். எனவே அந்த கதை உரிமையை வாங்க லைகா பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது லைகா நிறுவனத்திடம் அந்தப் படக்குழு 50 லட்சம் ரூபாய் கேட்டது. ஆனால் லைகா நிறுவனம் 50 லட்சம் ரூபாயை தரவில்லை. பிறகு விடாமுயற்சி படத்தை பார்த்த பிறகே தொகையை முடிவு செய்வோம் என்று அப்படக்குழு கூறிவிட்டது.
இதுதான் காரணம்: அதன்படி படமும் பிரேக் டவுன் குழுவுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அந்த ரிப்போர்ட்டை பிரேக் டவுன் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்துவிட்டனர். ஆனால் அமெரிக்காவில் இப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என்பதால் அந்த மெயிலுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவில்லை. இதனால்தான் அந்தப் படம் தாமதமாகியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











