Saran - உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.. விக்ரம் பட இயக்குநரை விளாசிய பிரபலம்
சென்னை:Saran (சரண்) சரண் இயக்கத்தில் உருவான ஜெமினி படத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். கமர்ஷியல் படங்களுக்கு நேர் எதிராக படம் இயக்கும் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தாலும் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் சரண் எப்போதும் கில்லாடி. காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜே ஜே, அட்டகாசம் என அவர் எடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை.

ஜெமினி: அவர் இயக்கிய படங்களில் ஜெமினி படம் முக்கியமானது. பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருந்த அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். சினிமா என்றால் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் என்று இருந்த விதியை உடைத்து இரண்டு பேருமே கெட்டவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற லைனை பிடித்து படமாக்கினார் சரண்.
ஏவிஎம்மின் ரீ எண்ட்ரி: பாரம்பரிய சினிமா கம்பெனியான ஏவிஎம் தயாரித்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக இந்தப் படத்திற்கு முன்னதாக சில வருடங்கள் படங்கள் தயாரிப்பதை நிறுத்தியிருந்த ஏவிஎம் இதன் மூலம்தான் ரீ எண்ட்ரி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலாபவன் மணி: விக்ரம் ஆகச்சிறந்த நடிகர் என்பதை பல முறை நிரூபித்துவிட்டார். அவர் ஸ்க்ரீனில் இருக்கும்போது அவரைத் தவிர்த்து மற்றொருவரிடம் கண்கள் போவது ரொம்பவே அரிது. ஆனால் ஜெமினியில் விக்ரமைவிட ஒரு படி மேலே சென்று ஸ்கோர் செய்திருப்பார் கலாபவன் மணி. அதுவரை அப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா கண்டதில்லை. அப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
சித்ரா லட்சுமணன்: இந்நிலையில் ஜெமினி படத்தில் நடந்த சமபவம் குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில், "ஜெமினி படத்தில் மலையாள நடிகரான முரளி சிங்கப்பெருமாள் என்ற காவல் அதிகாரியாக நடித்திருந்தார். முதலில் இயக்குநர் சரண் அந்தக் கதாபாத்திரத்தை படம் நெடுகிலும் நல்லவர் போல காட்டிவிட்டு க்ளைமேக்ஸில் கெட்டவர் போல்தான் எழுந்தியிருந்தார்.
தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை: ஆனால் இந்த ட்விஸ்ட் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு பிடிக்கவில்லை. மேலும் இந்த முடிவை கொஞ்சம் மாற்றிவிட்டால் சரியாக இருக்கும். நீங்கள் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் செல்வக்குமாரிடம் இந்தப் படத்துடைய க்ளைமேக்ஸ் பற்றி பேசுங்களேன் என சொன்னார். சரணோ, அவர் பழைய ஆளு. அவருடன் இணைந்து க்ளைமேக்ஸை முடிவு செய்தால் சரியாக இருக்குமா என சரவணனிடம் கேட்டிருக்கிறார். சரவணனோ, 'அதெல்லாம் சரியாக இருக்கும் நீங்கள் பேசுங்கள்' என சொல்லியிருக்கிறார்.
மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: சரவணனின் பேச்சை தட்ட முடியாத சரண் பீட்டரிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார். அப்போது பீட்டர் செல்வக்குமார் சரணிடம், "எப்போதும் திரைக்கதையில் கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றினால் உங்களை மக்கள் மன்னிப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை முட்டாள் ஆக்க வேண்டும் என நினைத்தால் மன்னிக்கமாட்டார்கள். அந்த காவல் துறை அதிகாரியை கடைசியில் கெட்டவன் என காண்பிப்பது மக்களை நீங்கள் முட்டாள் ஆக்குவது போல் இருக்கிறது என சொல்லி சரணின் மைண்ட் செட்டை மாற்றினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











