அஞ்சான் படத்தில் குத்தாட்டம் போட ரூ.1 கோடி வாங்கிய நடிகை சித்ரங்கதா சிங்
மும்பை: சூர்யாவின் அஞ்சான் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இந்தி நடிகை சித்ரங்கதா சிங்கிற்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் அஞ்சான். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகின்றன. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றது.

சமந்தா
அஞ்சான் படம் மூலம் சமந்தா சூர்யாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் சமந்தா கவர்ச்சியாக உடை அணிந்து வரும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

குத்துப்பாட்டு
தற்போது எல்லாம் படத்தில் குத்துப் பாடல் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இந்த குத்துப் பாடலுக்கு பெரிய நடிகைகளை ஆட வைப்பது ஃபேஷன் ஆகிவிட்டது.

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி
அஞ்சான் படத்திலும் குத்துப் பாடல் உள்ளது. சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி... சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி என்று துவங்கும் பாடலை விவேகா எழுதியுள்ளார்.

சித்ரங்கதா சிங்
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி... சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி பாடலுக்கு இந்தி நடிகை சித்ரங்கதா சிங் குத்தாட்டம் போட்டுள்ளார். மும்பையில் பிரமாண்ட செட் அமைத்து இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

சம்பளம்
அஞ்சான் படத்தில் ஒரேயொரு ஒரு பாட்டுக்கு ஆட சித்ரங்கதா சிங்கிற்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம். ஒரு ஆண் குழந்தைக்கு தாயான 38 வயதாகும் சித்ரங்கதா இந்த வயதிலும் சிக்கென்று இருப்பதால் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஆட வைக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











