சித்தா இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. சியான் 62 இயக்குநரே அவர் தான்.. தெறிக்கவிடும் இன்ட்ரோ!

சென்னை: தங்கலான் படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு தெறி மாஸாக வெளியாகி உள்ளது.

Chittha Director SU Arun Kumar roped for Chiyaan 62

சித்தார்த்தை வைத்து சமீபத்தி சித்தா படத்தை இயக்கி அனைவரையும் கண் கலங்க வைத்த அருண் குமார் இயக்கத்தில் தான் சியான் விக்ரம் தனது 62வது படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பாணியில் படத்தின் அறிமுகத்துக்கே சூப்பரான வீடியோ ஒன்றை உருவாக்கி படக்குழு வெளியிட்டுள்ளது.

தங்கலான் வருது: வரும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை சியான் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட நிலையில், அடுத்து தனது 62வது படத்தின் இயக்குநர் யார் என்கிற மாஸான அப்டேட்டை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சித்தா பட இயக்குநர்: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் அதன் கதைக்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முக்கியமான கருவை வைத்துக் கொண்டு ஒரு சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் இடையே உண்டான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த்துக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

Chittha Director SU Arun Kumar roped for Chiyaan 62

சியான் 62 அப்டேட்: எஸ்.யூ. அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உருவாக உள்ள சியான் 62 படத்தின் அறிமுக வீடியோ எளிமையாகவும் வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்டு இருந்தது. இசை பற்றி சொல்லும் போது இசையமப்பாளர் பெயரும் ரைட்டரை அழைக்க ரைட்டர் அண்ட் டைரக்டர் என அருண்குமார் பெயரும், கடைசியாக நீ யாருன்னு சொல்லு என சொல்ல சியான் விக்ரம் பெயரும் டேபிள் உடைந்து விட்டது என சொல்லும் இடத்தில் தயாரிப்பாளர் பெயரும் என வெளியாகி தாறுமாறாக அறிமுகமே ரசிக்கும் படி உள்ளது.

நிச்சயம் இந்த படமும் சியான் விக்ரமுக்கு ஒரு நல்ல கருத்துள்ள கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தணி பேக்ட்ராப்பில் இந்த படத்தின் கதை உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X