சியான் 60 படத்தோட இறுதிக்கட்ட படப்பிடிப்பு... விரைவில் டார்ஜிலிங்கில் துவக்கம்
சென்னை : கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட சியான் 60 படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்
ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சியான் 60. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

டார்ஜிலிங்கில் துவக்கம்
லாக்டவுன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் துவங்கவுள்ளதாகவும், இதில் சியான் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு
இதையடுத்து படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு படக்குழுவினர் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையைமத்துவரும் நிலையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ படத்தை தயாரித்து வருகின்றனர்.
Recommended Video

பபுன் என வைக்கப்பட்டதாக தகவல்
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு பபுன் என்று பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விக்ரம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.


Click it and Unblock the Notifications











