என்னாச்சு.. கடைசி நேரத்தில் திடீரென நீக்கப்பட்ட அனிருத்.. ஆரம்பித்தது சியான் 60 படப்பிடிப்பு!
சென்னை: நடிகர் விக்ரமின் 60வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் விக்ரம். கதைக்கு அவசியம் என்றால் எந்த மாதிரியான ரிஸ்க்கையும் எடுக்க தயங்க மாட்டார்.
பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து தன்னை நிலை நிறுத்தியவர் விக்ரம்.

கார்த்திக் சுப்புராஜ்
தற்போது அஜய் ஞானமுத்துவின் கோப்ரா மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கிறார் விக்ரம்.

விக்ரம் திரும்பியதும்
இந்நிலையில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் விக்ரம். கோப்ரா படப்பிடிப்பு முடிந்து விக்ரம் திரும்பியதும் சியான் 60 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்தோஷ் நாராயணன்
இந்நிலையில் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே அனிருத்துதான் இந்தப் படத்திற்கு இசையமைக்க போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன்தான் இப்படத்திற்கு இசையமைக்க போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதரவும் அன்பும் தேவை
மேலும் புரிந்து கொண்டு சப்போர்ட் செய்ததற்கு நன்றி என்று அனிருத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்கள் அனைவரின் ஆதரவு, ஆசிர்வாதம் மற்றும் அன்பும் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.

என்ன பிரச்சனை?
இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன ஆச்சு? என்ன பிரச்சனை? ஏன் திடீரென அனிருத் மாற்றப்பட்டார் என கேட்டு வருகின்றனர். இதனிடையே சியான் 60 படத்தில் வாணி போஜன் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது சிம்ரனும் நடிக்கிறார் என்றும், அவர்தான் விக்ரமுக்கு ஜோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











