முழுவீச்சில் தொடங்கவுள்ள சியான் 60 படப்பிடிப்பு!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படம் சியான் 60.

இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆக்ஷன் த்ரில்லராக இந்த படம் தயாராகிறது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

கேங்ஸ்டர் படங்களை விரும்பி இயக்குபவர் கார்த்திக் சுப்புராஜ். சியான் விக்ரமை வைத்து இயக்கும் இந்த படமும்
கேங்ஸ்டர் படமாக இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

அஜய் ஞானமுத்து இயக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. Psychological Thriller ஆன இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார் விக்ரம். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

கொரோனா

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நின்று போன படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் மெல்ல தொடங்க ஆரம்பித்துள்ளன. மீண்டும் எப்போது அடுத்த கொரோனா அலை வரும் என்று தெரியாததால் படப்பிடிப்பு பணிகள் ஒரே கட்டமாக விரைவில் நடந்து முடியவுள்ளது.

ஜூலை 3ம் தேதி

ஜூலை 3ம் தேதி

அதன் படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 3ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் கோப்ரா படத்திற்கு முன்னரே இந்த படத்தின் பணிகளை முடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X