Just In
- 29 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறித்தனம்.. சியான் விக்ரமின் அடுத்த பட ஷூட்டிங் எப்போ தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: 'சியான் 60' படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள இந்தப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
கோப்ரா படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு 'சியான் 60' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேன்ட் அணியாமல் போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. எதுக்கு இப்படி எல்லாம் ட்ரை பண்றாரு?

விக்ரமின் 60வது படம்
நடிகர் சியான் விக்ரமின் 60வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளனர். கேங்ஸ்டர் கதையாக இந்த படமும் உருவாகும் என 'சியான் 60' அறிமுக போஸ்டர் விளக்கியது குறிப்பிடத்தக்கது.

உடம்பை ஏற்றி
அப்பாவை போல உடம்பை ஏற்றி மிரட்டும் சிக்ஸ் பேக் லுக்கில் சமீபத்தில் போஸ் கொடுத்திருந்த துருவ் விக்ரமின் போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகின. இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகவும் துருவ் விக்ரம் ஒரே ஒரு படத்தில் நடித்து மாறியது மறுக்க முடியாத உண்மை.

ஆரம்பமே அசத்தல்
தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை பாலிவுட்டில் கபீர் சிங் என ரீமேக் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஆக்கினர். தமிழில் அந்த படத்தை ஆதித்யா வர்மா என்ற டைட்டிலில் இயக்குநர் கிரிசாயா இயக்கி இருந்தார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட்டில் வெளியான அக்டோபர் படத்தில் நடித்த நடிகை பனிடா சந்து நடித்து இருந்தார். முதல் படம் என்பது துளி கூடத் தெரியாமல் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி ஆரம்பமே அசத்தியிருந்தார் துருவ்.

எப்போ ஆரம்பம்
இந்நிலையில், சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள ‘சியான் 60' படத்தின் ஷூட்டிங் எப்போ ஆரம்பமாக உள்ளது என்கிற தகவல் கசிந்துள்ளது. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘சியான் 60' படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்ஃபான் பதான், ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு ‘சியான் 60' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

பொன்னியின் செல்வன் எப்போ
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை. இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கையும், பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கையும் லைகா நிறுவனம் எப்போது தொடங்கும் என்றும் தெரியவில்லை. கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் படமும் வெயிட்டிங்கில் உள்ளது.