சியான் 60.. இதுதான் டைட்டிலா.. வெளியான அந்த தகவல்.. ரசிகர்கள் மத்தியில் எழுந்த குழப்பம்?

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மற்றும், அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் விக்ரம்.

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கிற்காகவும் காத்துக் கிடக்கிறார்.

இணைப்பு

இணைப்பு

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் அறிமுகமான த்ருவ் விக்ரமுக்கு, ஆரம்ப படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால், அடுத்த படத்திலாவது மகனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிப்பதாக முன்னதாக ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் தனது மகனையும் தற்போது இணைத்துள்ளார் விக்ரம்.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

சியான் விக்ரமின் 60வது படத்திற்கு "திறவுகோல் மந்திரவாதி" என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வைரலாக சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தின் டைட்டில் இதுதானா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்ப ஒரு விசயம் காரணமாக அமைந்திருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் விக்கிபீடியா

கார்த்திக் சுப்புராஜ் விக்கிபீடியா

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அடுத்ததாக விக்ரம், த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள சியான் 60 படத்தை இயக்கப் போவதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார். அவரது விக்கிபீடியா பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்திற்கு அடுத்ததாக "திறவுகோல் மந்திரவாதி" டைட்டிலில் படம் எடுக்கப் போவதாக உள்ள தகவலால் தான் இந்த சந்தேகம் எழுந்து இருக்கிறது.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள அந்த படத்திற்கு அப்படியொரு டைட்டிலை கார்த்திக் சுப்புராஜ் வைக்க மாட்டார் என்றும், அது செட்டாகாது என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஜகமே தந்திரம் போல இதுவும் வித்தியசமான பெயராக இருக்கிறது படத்திற்கு பக்காவா பொருந்தும் என்றூம் கூறி வருகின்றனர். சியான் 60 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹீரோயின்கள் அறிவிக்கப்படவில்லை.

பெண்குயின்

பெண்குயின்

இன்னும் 3 நாட்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள பெண்குயின் படம் அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X